இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகத்தில் முதல் கட்டமாக 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

1/16/2021 5:16:05 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

* வீடியோ கான்பரன்ஸ் மூலம் மோடி தொடங்கி வைத்தார்
* மதுரையில் இன்று முதல்வர் துவக்கி வைத்தார்

மதுரை: கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி போடும் திட்டம், தமிழகம் முழுவதும் 166 முகாம்களில் இன்று காலை துவங்கியது. மதுரை அரசு மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதியளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த 2 தடுப்பூசிகளும் கடந்த வாரம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்திற்கு 5.36 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி கடந்த வாரம் வந்தது. அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த தடுப்பூசி பிரித்து அனுப்பப்பட்டது. உரிய வெப்பநிலையில் இந்த தடுப்பூசிகள் அனைத்தும் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார். தமிழகத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை துவக்கி வைத்தார். முதல்வர் முன்னிலையில் அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில், மதுரை மாவட்ட தலைவர் அழகு வெங்கடேஷ், பல்நோக்கு மருத்துவ பணியாளர் முத்துமாரி இவர்கள் உட்பட 10 பேர் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டீன் சங்குமணி ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 166 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான 6 லட்சம்  சுகாதாரப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 4.50 லட்சம் பேர், இணையதளத்தில் பதிவு  செய்துள்ளனர். இவர்களுக்கு படிப்படியாக தடுப்பூசி வழங்கப்படும். சென்னையில் ராஜிவ்காந்தி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளிலும் மாநகராட்சிக்கு உட்பட்ட போரூர், ஈஞ்சம்பாக்கம், மாதவரம், ஆகிய இடங்களில் உள்ள நகர்புற சமுதாய நல மையங்களிலும், அப்பல்லோ மற்றும் எம்ஜிஎம் மருத்துவமனையிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஈஞ்சம்பாக்கம் மாநகராட்சி மையத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

உறுதிமொழி கேட்கும் அரசு
சென்னையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொள்ள உள்ளவர்கள் ஒரு உறுதி மொழி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவாக்சின் எடுத்து கொள்ளும் அனைவருக்கும் படிவம் ஒன்று அளிக்கப்படுகிறது. அதில் ‘‘கோவாக்சின் தடுப்பு மருந்து இன்னும் பரிசோதனையில் உள்ளன என்பதை நான் அறிவேன். இன்னும் அது கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு தரும் என ஆய்வு முடிவுகள் வரவில்லை என தெரியும். தெரிந்து தான் தடுப்பூசி எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் தடுப்பூசி எடுத்து கொள்பவர்கள் கையெழுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன் இந்த கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சில
  • அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம்

  • சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் இன்று தொடங்கியது: 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு

  • தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் அதிமுக நேர்காணல் நாளை மறுதினம் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படுகிறது: தலைமை சார்பில் அறிவிப்பு

  • கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை: தேமுதிக கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படுமா?

  • சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நாளை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

  • கூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல்

  • பாளை கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அகிம்சை முறையில் நரேந்திர மோடியை நாக்பூருக்கே திருப்பி அனுப்ப வேண்டும்: ராகுல்காந்தி பேச்சு

  • பெண் ஐ.பி.எஸ்க்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான புகார் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

  • 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 14 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு; சிவன் பேட்டி

  • காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு

Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]