இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

இஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்கள் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரான் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக் கொலை; மேற்கு ஆசியாவில் போர் மேக அச்சம்

11/28/2020 4:56:46 PM
பெல்ஜியத்திற்கு ஒரு விலை... இந்தியாவிற்கு வேறு விலை... ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். செய்தி தொடர்பாளர் கேள்வி கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

தெஹ்ரான்?: இஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்களின் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரானின் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மேற்கு ஆசியாவில் போர் மேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரான் நாட்டின் ‘அணுகுண்டு திட்டத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் உயர்மட்ட விஞ்ஞானி மொஹ்சின் ஃபக்ரிசாதே, நாட்டின் தலைநகரான தெஹ்ரான் அடுத்த அப்சார்ட் நகர் வழியாக (இந்திய நேரப்படி நேற்றிரவு) காரில் சென்று கொண்டிருந்தார். அப்ேபாது காரை வழிமறித்த கும்பல் ஒன்று, மொஹ்சின் ஃபக்ரிசாதேவின் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் காருக்குள் இருந்த அவரையும் சுட்டுக் கொன்றது. அவரது கார், துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக துளைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் மொஹ்சினுடன் இருந்த 3 முதல் 4 பேர் இறந்துள்ளதாக ஃபார் நியூஸ்  தெரிவித்துள்ளது.

இந்த படுகொலை சம்பவத்திற்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை. விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், ஈரான் நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் தனது டுவிட்டர் பதிவில், ‘பயங்கரவாதிகள் இன்று ஈரானிய பிரபல விஞ்ஞானியைக் கொன்றனர். இந்த மோசமான செயல் சதிகாரர்களின் விரக்தியை வெளிப்படுத்துகிறது. இந்த சம்பவத்தில் இஸ்ரேலின் பங்குள்ளது’ என்று தெரிவித்துள்ளார். ஆனால், ஈரானிய குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. முன்னதாக அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால், அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானுடன் பன்முக ஒப்பந்தத்தில் மீண்டும் சேர தற்போது அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பிடன் விரும்புவதாக தகவல்கள் தெரிவித்தன.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேலிய பிரதமர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மற்றும் சவுதி அரேபியா இளவரசர் ஆகியோர் ரகசிய சந்திப்பை நடத்திய இந்த நேரத்தில் விஞ்ஞானி படுகொலை நடந்துள்ளது. இதனால், மேற்கு ஆசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஈரானின் அணு ஆயுத திட்டங்களான ‘அமத்’ அல்லது ‘ஹோப்’ ஆகியவற்றை மொஹ்சின் வழிநடத்தியதாக கூறப்படுகிறது. மொஹ்சின் ஃபக்ரிசாதே 1989ம் ஆண்டு முதல் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளின் ‘இலக்காக’ இருந்தார். சம்பவம் குறித்து ஈரானின் உயர்மட்ட நிர்வாக தலைவர் அயதுல்லா அலி கமானியின் ராணுவ ஆலோசகர் கூறுகையில், ‘இந்த படுகொலைக்கு நாங்கள் பழிவாங்குவோம். டிரம்பின் கடைசி நாட்களில், ஈரானுடனான போரைத் தூண்டுவதில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது’ என்றார்.

மேலும் சில
  • வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை



  • புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்



  • அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி



  • இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு



  • தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்



  • ஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்



  • அமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது



  • கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது: ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரிக்கை



  • ஹாங்காங் விவகாரத்தில் தலையீடு; 14 சீன அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை: வெளியுறவுத்துறை செயலர் அறிவிப்பு



  • உலகில் முதன்முறையாக அங்கீகரிக்கப்பட்ட ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் - 5’ தடுப்பூசி விநியோகம் தொடங்கியது: மாஸ்கோவில் ஆர்வமுடன் போட்டுக் கொண்ட மக்கள்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]