இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு

10/18/2020 6:36:09 PM
லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி டிசம்பர் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றஎடப்பாடி-ஓபிஎஸ் பலப்பரீட்சை: அதிமுகவில் இரு அணிகளும் ஆதரவாளர்களை திரட்டுவதால் பரபரப்பு

தண்டையார்பேட்டை: குடும்ப பிரச்னையில் உறவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
சென்னை ராயபுரம் மேற்கு மாதாகோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 4வது மாடியில் வசித்துவருபவர் இப்ராகிம்ஷா (57). இவர் மண்ணடி அங்குமுத்து தெருவில் ஓட்டல் நடத்துகிறார். இவரின் மனைவி பரகத்நிஷா (47). குடும்ப பிரச்னை காரணமாக தம்பதி இடையே நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த இப்ராகிம்ஷா, அந்த பகுதியில் வசித்துவரும் தனது மனைவியின் அக்கா மகன் அசாருதீன் (27) என்பவருக்கு போனில் பேசி நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பரகத்நிஷாவுக்கு ஆதரவாக அசாருதீன் பேசியதால் போனிலேயே இருவருக்கும் கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசாருதீன், நேரில் வந்து பேசுவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து நேற்று இரவு 10.30 மணி அளவில் இப்கிராம்ஷா வீட்டுக்கு அசாருதீன் வந்துள்ளார். அப்போது, பாத்ரூமில் மறைந்திருந்த இப்ராகிம்ஷா, அருகில் வந்தால் துப்பாக்கியால்சுட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இருப்பினும் அவற்றை பொருட்படுத்மல் பாத்ரூம் அருகே அசாருதீன் சென்றபோது அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரி சுட்டுள்ளார்.

இதில் அசாருதீனின் இடது உள்ளங்கையில் குண்டுபாய்ந்து ரத்தம் கொட்டியது. இதனால் 4வது மாடியில் இருந்து அலறியபடி அசாருதீன் கீழே ஓடிவந்தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் நின்றிருந்த அசாருதீனை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இதுகுறித்து அறிந்ததும் ராயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். துப்பாக்கியால் சுட்டதால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக இப்கிராம்ஷாவின் இடதுகையில் கண்ணாடி துகள்கள் குத்தி படுகாயம் ஏற்பட்டிருந்ததால் அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இப்ராகிம்ஷாவின் மனைவியிடம் விசாரித்தனர். ’மாடியில் துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. வேறு எதுவும் எனக்கு தெரியாது’ என்றார்.
இதையடுத்து இப்ராகிம்ஷாவின் வீட்டில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 8 குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் சில
  • டாஸ்மாக் விற்பனையாளர் வெட்டி கொலை; தடுத்தவருக்கும் வெட்டு



  • சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்டு 13 லாரிகளில் கடத்தப்பட்ட 4 டன் குட்கா மின்சாதன பொருட்கள் அதிரடி பறிமுதல்: அதிகாரிகளுடன் வடமாநில கும்பல் மோதல்



  • நாளை மறுநாள் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை



  • பப்ஜி விளையாட்டில் கோடி கணக்கில் சுருட்டல்: ஆபாசமாக பேசி சிறுமிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய யூ டியூப்பர் மதன் எங்கே?: பொறிவைத்து தேடும் தனிப்படை



  • குழந்தை வேண்டாம் என வற்புறுத்தியதால் திருமணமான 3 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை



  • வேறு ஒருவருடன் நெருக்கமாக இருந்ததால் ஆத்திரம் பெட்ரோல் ஊற்றி கள்ளக்காதலியை எரித்து கொன்று கள்ளக்காதலனும் தீக்குளித்து சாவு: கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கரம்



  • கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்



  • திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை



  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]