இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய கோரி தமிழகம் முழுவதும் 27 இடங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

10/15/2020 5:03:44 PM
டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் 2 ஆசிரியைகள் தலைமறைவு: தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர் மருத்துவ பரிசோதனைகளுக்காக நடிகர் ரஜினி அமெரிக்கா புறப்பட்டார்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய கோரி தமிழகம் முழுவதும் 27 இடங்களில் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் உள்ள பல்கலைக்கழகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்  சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.,  அண்ணா பல்கலைகழகம் மாநில அரசின் நிர்வாக  கட்டுப்பாட்டிலேயே இறுதிவரை தொடர வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன்பாக போராட்டம் நடத்த்தப்படும் என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் 27 இடங்களில் கல்லூரிகள் முன்பாக திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் எதிரே காந்தி மண்டபம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொது செயலாளர் பொன்முடி, மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, மாதவரம் சுதர்சனம்,  எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், மாவட்ட மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, ராஜா அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நம்முடைய பிள்ளைகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க கூடாது என்று ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகம் மிகப்பெரிய அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் கொடுத்து வருகிறது. இதற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு இவர்கள் யார்?. இப்போது என்ஜினியரிங் படிக்க 4 ஆண்டுகளுக்கு வெறும் ரூ.4 லட்சம் தான் செலவு ஆகிறது. ஆனால், இந்த சிறப்பு அந்தஸ்து கிடைத்தது என்றால், வருடத்திற்கு மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் செலவு ஆகும்.

இது முதல் கட்ட போராட்டம் தான். இது தொடர் போராட்டமாக தொடரும். சிறப்பு அந்தஸ்து திட்டத்தை கைவிடவில்லை என்றா அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெளியே நடக்கும் போராட்டம், நாளை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்ளே நடக்கும். மாநில அரசு முதுகெலும்பு இல்லாமல், பிரதமர் மோடி எதை சொன்னாலும் செய்கிற கூஜா தூக்கும் அரசாக இருந்து வருகிறது. இந்த அரசு போய் விட்டது என்றால் தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் மீட்கப்படும். இன்னும் 6 மாதம் காலம் தான் இருக்கிறது. திமுகவை ஆட்சியில் அமர வைக்க ஒட்டுமொத்த மக்களும் தயாராக இருக்கிறார்கள். தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தவுடன் விட்டுக்கொடுக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் மீட்டெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் 2 ஆசிரியைகள் தலைமறைவு: தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்



  • மருத்துவ பரிசோதனைகளுக்காக நடிகர் ரஜினி அமெரிக்கா புறப்பட்டார்



  • பப்ஜி விளையாட்டில் பெண்களிடம் ஆபாச பேச்சு: யூடியூபர் மதனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை: நெருக்கமான தோழிகளின் பட்டியலை சேகரித்து விசாரிக்க முடிவு



  • தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாள் முடிகிறது: பொது போக்குவரத்துக்கு அனுமதி?: மருத்துவர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் ஆலோசனை



  • தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் 200க்கும் கீழ் சரிந்த கொரோனா



  • அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டன் மதுரையில் பதுங்கல்?.. 2 தனிப்படை போலீசார் விரைந்தனர்



  • ‘‘ஜெ. எல்லாவற்றையும் பார்க்கிறார் அவர் நமக்கு துணையிருப்பார்’’: சசிகலா ஆடியோ அரசியல்



  • கலைஞர் நினைவு நூலக கட்டிடம் உள்பட 11 கட்டுமான பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு



  • 2ம் தவணையாக கொரோனா நிவாரண உதவி; ஆழ்வார்பேட்டை, நந்தனம் ரேஷன் கடைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு: பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கினார்



  • நடிகையுடன் 5 ஆண்டு குடும்பம் நடத்தி ஏமாற்றிய வழக்கு; அதிமுக மாஜி அமைச்சர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]