இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

வெற்றிகரமான பரிசோதனையில் கொரோனாவுக்கு மற்றொரு தடுப்பூசி: ரஷ்யா அறிவிப்பு

10/15/2020 4:52:57 PM
காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

மாஸ்கோ: கொரோனாவை எதிர்கொள்ள பரிசோதனை நிலையில் உள்ள மற்றொரு தடுப்பூசிக்கு ரஷ்யா அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனாவால் உலகம் முழுவதும் 3 கோடியே 85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை 73 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம் என்று ரஷ்யா ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தற்போது மற்றொரு தடுப்பு மருந்தும், பரிசோதனை நிலையில், நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. செர்பியாவின் வெக்டார் இன்ஸ்டிடியூட்டில் இந்த பரிசோதனையில் முதல் கட்டம் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்ட பரிசோதனையில் மனிதர்களுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், அது பயனளிக்கும் வகையிலும், அதே சமயம் பக்க விளைவுகள் குறைவாகவும் உள்ளதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், ‘‘2வது தடுப்பு மருந்து, முதல் கட்ட பரிசோதனையில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருந்தது என்பது உண்மைதான். எபிவாக் கொரோனோ என பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பு மருந்து, அடுத்த கட்டமாக 18 முதல் 60 வயதுள்ள நபர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. முதல் கட்ட பரிசோதனை விபரங்களை சமர்ப்பித்து, அடுத்த கட்ட பரிசோதனைக்கான முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது’’ என்று அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளார். மாஸ்கோவின் காமாலயா  இன்ஸ்டிடியூட்டில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவுக்கான ‘ஸ்புட்னிக் வி’ என்ற தடுப்பு மருந்து, ஆகஸ்ட் மாத இறுதி முதலே பயன்பாட்டில்  உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

மேலும் சில
  • ‘நாசா’ அனுப்பிய விண்கலம் செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கியது



  • தெற்கு பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை



  • வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை



  • வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை



  • புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்



  • அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி



  • இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு



  • தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்



  • ஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்



  • அமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]