இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது

10/14/2020 5:37:48 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

கயத்தாறு: கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள ஓலைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (55). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு ஆடு மேய்க்கும் தொழிலாளியான சிவசங்கு (60) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆடு திருடு போனது தொடர்பாக விரோதம் உருவானது.

இதனிடையே கடந்த 8ம் தேதி திருமங்கலக்குறிச்சி காட்டுப் பகுதியில் ஆடு மேய்க்கும் இடத்தில் இருவருக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதையடுத்து பால்ராஜை ஆடு மேய்க்கும் இடத்தில் வைத்து சிவசங்கு தனது உறவினர்களின் உதவியோடு தனது காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்து மிரட்டினாராம். அப்போது இதை வீடியோ எடுத்த அவரின் உறவினர்கள் சிலர், சமூக வலைதளங்களில் பதிவிட்டுனர்.

இது வைரலாக பரவிய நிலையில் இதுகுறித்து கயத்தாறு போலீசில் பால்ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் சிவசங்கு, அவரது மகன் சங்கிலிப்பாண்டி (19), சிவசங்கு மகள் உடையம்மாள் (33), உறவினர்களான சண்முகையா மகன்கள் பெரியமாரி (47), வீரையா (42), பெரியமாரி மகன் மகேந்திரன் (20), மற்றும் சங்கிலிப்பாண்டி மகன் மகாராஜன் (24), கருப்பசாமி மகன் அருண் கார்த்திக் (21) ஆகிய 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவை அடுத்து கோவில்பட்டி டிஎஸ்பி கலைகதிரவன் தலைமையில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, எஸ்ஐ அரிக்கண்ணன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர், உடையம்மாள் தவிர மற்ற 7 பேரையும் கைது செய்தனர். இதில் அருண் கார்த்திக் இந்த வீடியோவை சமூக வலை தளங்களில் பதிவிட்டு பகிர்ந்தவராவார். இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டினார்.

அனுமதிக்க முடியாது: எஸ்பி

இச்சம்பவம் குறித்து எஸ்.பி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பால்ராஜை வலுக்கட்டாயமாக காலில் விழ வைத்து மிரட்டி அதை வீடியோவாக எடுத்துள்ளது அநாகரிகமானது. அத்துடன் சட்டத்துக்குப் புறம்பான இதுபோன்ற செயல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பால்ராஜ் அளித்த புகாரின் பேரில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஓலைக்குளம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பால்ராஜிக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்றார். பின்னர் எஸ்.பி. ஜெயக்குமார், டிஎஸ்பி கலைக்கதிரவன் ஆகியோர் பால்ராஜ் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் சில
  • வேறு ஒருவருடன் நெருக்கமாக இருந்ததால் ஆத்திரம் பெட்ரோல் ஊற்றி கள்ளக்காதலியை எரித்து கொன்று கள்ளக்காதலனும் தீக்குளித்து சாவு: கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கரம்



  • கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்



  • திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை



  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]