சவரனுக்கு ரூ128 அதிகரிப்பு: தங்கம் விலை 2வது நாளாக உயர்ந்தது
9/30/2020 5:16:45 PM
சென்னை: தங்கம் விலை இன்று 2வது நாளாக ஒரு சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ரூ.38,672க்கு விற்பனையானது. தொடர்ந்து விலை ஏறி வருவதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான நிலை இருந்து வந்தது. ஊரடங்கு காலத்தில் வேகமாக உயரத் தொடங்கிய நகை விலை கடந்த 25ம்தேதி முதல் சரிவை சந்தித்தது. அப்போது, ஒரு சவரன் விலை ரூ.37,920 வரை குறைந்தது. இது நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை தந்தது. ஆனால் நேற்று காலையில் தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கிடு,கிடுவென உயர்வை சந்தித்தது. அதாவது கிராமுக்கு அதிரடியாக ரூ.76 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,816க்கும், சவரனுக்கு ரூ.608 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,528க்கும் விற்கப்பட்டது.
மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் விலையை விட மாலையில் கிராமுக்கு ரூ.78 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4818க்கும், சவரனுக்கு ரூ.624 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,544க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது நகை வாங்குவோரை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்தது. ஒரு சவரனுக்கு ரூ.128 விலை உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4834க்கும், ஒரு சவரன் நகை ரூ.38,672க்கும் விற்பனையானது. தொடர்ந்து விலை உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.