இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?

9/29/2020 5:12:25 PM
7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: தீவிரவாதம் தொடர்புடைய வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பால், சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை நிறுவுவதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமையகம் டெல்லியில் செயல்படும் நிலையில், அதன் கிளைகள் மும்பை, கவுகாத்தி, ஜம்மு காஷ்மீர், கொல்கத்தா, ஐதராபாத், கொச்சி, லக்னோ, ராய்ப்பூர், சண்டீகர் ஆகிய இடங்களில் உள்ளன. சமீபகாலமாக ெதன்மாநிலங்களில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் ஆதரவளிப்போர் தொடர்பாக சிலரை தேசிய பாதுகாப்பு அமைப்பு கைது செய்துள்ளது. குறிப்பாக பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் தீவிரவாத கும்பலின் தொடர்புகள் அதிகமாக உள்ளதாக பல்வேறு உளவு தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சென்றன.

இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) கிளையை சென்னை (தமிழ்நாடு), ராஞ்சி  (ஜார்கண்ட்), இம்பால் (மணிப்பூர்) ஆகிய நகரங்களில் கூடுதலாக அமைக்க மத்திய  உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக என்ஐஏ வட்டாரங்கள் கூறுகையில், ‘தமிழ்நாடு, கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையதாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் என்ஐஏ விசாரிக்கும் வழக்குகளை கொச்சியில் உள்ள கிளை நிர்வகித்து வருகிறது. புதிய அலுவலக கிளைக்கு காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) நிலையிலான அதிகாரி தலைமை தாங்குவார். நாடு முழுவதும் கடந்த ஏழு ஆண்டுகளில் மொத்தம் 351 தீவிரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்குகளை என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

தமிழகத்தில் இந்தாண்டு இரண்டு வழக்குகளை என்ஐஏ பதிவு செய்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்களை தமிழக காவல்துறையின் ‘க்யூ’ பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பின்னர் இவ்வழக்கை என்ஐஏ விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. ேபாலீஸ் எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு, கடந்த 2014ல் புதுச்சேரியில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு, 2014இல் பிரதமர் அலுவலக இணைய அமைச்சராக இருந்த தற்போதை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் வீட்டு வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட வழக்கு ஆகியவற்றை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

இவற்றை தவிர, தமிழ்நாட்டில் மேலும் ஆறு வழக்குகளை என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளில் தொடர்புடைய பலரும் ஐஎஸ் தீவிரவாத குழுவுடன் தொடர்புடையவர்கள். மேலும், நிர்வாக வசதிக்காக சென்னையில் என்ஐஏ கிளை நிறுவப்படுகிறது. மூன்று புதிய கிளைகளுடன், நாடு முழுவதும் 12 கிளை அலுவலகங்களுடன் செயல்படும். மூன்று புதிய கிளைகள் உருவாக்கப்படுவதன் மூலம் என்ஐஏ-யின் செயல்பாடுகள் துரிதமாகும். தீவரவாத செயல்பாடுகளை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும். நாட்டில் தீவிரவாத கட்டமைப்புகள் உருவாவதை தடுக்க முடியும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சில
  • உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்



  • பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி : தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்



  • இந்தாண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்



  • கடும் குளிரில் கொரோனா வேகமாக பரவுவதால் டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 2ம் அலை?: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்



  • போதை பொருள் வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க கோரிக்கை வெடி பொருளுடன் நீதிபதிக்கு கொலை மிரட்டல்: பெங்களூருவில் பெரும் பரபரப்பு



  • டிசம்பருக்குள் 30 கோடி தடுப்பூசி: பொதுமக்களுக்கு மார்ச்சில் விநியோகிக்க முடிவு



  • மோடியின் புகைப்படத்தை போடுவதில் சர்ச்சை: எனது மார்பை கிழித்து பாருங்கள்..!: நிதிஷ்குமாருக்கு சிராக் பஸ்வான் பதிலடி



  • போலீஸ்காரரை அடித்த வழக்கில் பெண் அமைச்சருக்கு 3 மாதம் சிறை: மகாராஷ்டிராவில் பரபரப்பு



  • ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு: 7 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]