இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்; காஞ்சிபுரம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரையில் பிரம்மாண்ட வரவேற்பு

9/27/2020 5:17:45 PM
7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்

காஞ்சிபுரம்: விவசாயிகளுக்கு விரோதமான மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து திமுக கூட்டணி கட்சி சார்பில், காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி, களத்துமேடு பகுதியில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார். முன்னதாக, காஞ்சிபுரம் வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சிபுரம் நகர எல்லையான பொன்னேரிக்கரையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து கீழம்பி, களத்துமேட்டில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். மாநில மாணவரணி செயலாளர் வக்கீல் எழிலரசன் எம்எல்ஏ வரவேற்கிறார்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் மதியழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கமலநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக் குமார், மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அல்லா பக்ஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட அமைப்பு செயலாளர் ஷாஜகான், திராவிடர் கழக மாவட்ட அவைத் தலைவர் அசோகன், திமுக மாவட்ட அவைத்தலைவர் சேகரன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், க.குமணன், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி, களத்துமேடு பகுதியில் மேடை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

மேலும் காஞ்சிபுரம் நகரம், சிறுகாவேரிப்பாக்கம், கீழம்பி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சாலையின் இருபுறமும் திமுக கொடிகள் கட்டப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலினை வரவேற்க காஞ்சிபுரம் நகர எல்லையான பொன்னேரிக்கரையில் பிரமாண்ட வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் செங்குட்டுவன், எஸ்.கே.பி.சீனிவாசன், மதுராந்தகம் நகர செயலாளர் குமார், ஒன்றிய செய லாளர்கள் சேகர், தரன், கே.எஸ்.ராமச்சந்திரன், கண்ணன், தம்பு, சத்திய சாய், சரவணன், ஏழுமலை, நீலகண்டன், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய பொருளாளர் தசரதன், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், துணை அமைப்பாளர் யுவராஜ், மாணவரணி அமைப் பாளர் அபுசாலி, ஏ.வி.சுரேஷ்குமார், ராம்பிரசாத், சேகர், தொமுச பேரவை சுந்தரவதனம், இளங்கோவன், காஞ்சிபுரம் நகர அவைத்தலைவர் சந்துரு, துணை செயலாளர்கள் கருணாநிதி, ஜெகநாதன், பொருளாளர் வெங்கடேசன், கீழம்பி ஊராட்சி செயலாளர் மாரிமுத்து, நிர்வாகிகள் செவிலிமேடு மோகன், நாத்திகம் நாகராஜன், கமலக்கண்ணன் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட உள்ளன. வேளாண் சட்டதிருத்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என கூறி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண்துறை சார்ந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வரு கின்றனர். இந்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் இந்திய விவ சாயிகளுக்கும், விவசாயத்திற்கும் எவ்வித பாதுகாப்பும் இருக்காது. முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனங்களையும், உள்நாட்டுப் பெருநிறுவனங் களையும் சார்ந்து வாழவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவர். விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டுமென்று வலியுறுத்தப்படும்.

மேலும் சில
  • 7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்



  • முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆயுத பூஜை வாழ்த்து



  • பள்ளி, தியேட்டர் திறப்பு தொடர்பாக 28ம் தேதி கலெக்டர்கள், மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை



  • மருத்துவக் கல்வியைப் போன்று இன்ஜி. படிப்புக்கு நுழைவு தேர்வு தேவையில்லை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்



  • அதிகாரிகளின் அலட்சியத்தால், மழையில் நனைந்த 2000 மூட்டை நெல் முளைத்தது: தஞ்சை அருகே கொள்முதல் நிறுத்தம்



  • மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம் சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை: அரசு பள்ளி மாணவர்கள் கனவு நிறைவேறுமா?



  • சட்டசபை தேர்தல் வெற்றி வியூகம் குறித்து கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: மாலையில் சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு



  • மாதவரத்தில் நகை பறித்த 3 பேர் கைது: 12 சவரன், 2 பைக் பறிமுதல்



  • மாஸ்க் மூலம் கலர்புல் உடை: மாஸ் காட்டிய திருநங்கை: சிந்திக்க வைத்தது கொரோனா



  • கல்லூரி உதவி பேராசிரியர் தகுதிக்கான நெட் தேர்வு நவ. 19ல் நடைபெறும்: தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]