இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பீகார் போலீஸ் டிஜிபி விருப்ப ஓய்வு: அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிட திட்டம்

9/23/2020 5:28:30 PM
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு; விவசாயிகளின் குரல்களை அடக்கும் ஒன்றிய அரசு: டிராக்டர் ஓட்டிக்கொண்டு வந்த ராகுல் ஆவேசம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 968 எஸ்ஐகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பாட்னா: பீகார் மாநில போலீஸ் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே, மும்பையில் தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு தொடர்பான விசாரணையில் ஈடுபட்டிருந்தார். சுஷாந்த் மரணம் குறித்து மும்பை காவல்துறை விசாரணையின் போது, பீகார் காவல் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக செயல்பட்டவர். இப்போது இந்த வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே, தனது பணிக்காலம் முடிவதற்கு முன்னதாக விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். முன்னதாக, தனது விருப்ப ஓய்வு குறித்து மத்திய, மாநில அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் கடிதம் எழுதி இருந்தார். தற்போது இவரது விருப்ப ஓய்வு ஏற்கப்பட்டது. பாண்டேவின் கோரிக்கை ஏற்கப்பட்டதாக ஆளுநர் பாகு சவுகான் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ டிஜிபி குப்தேஷ்வர் பாண்டேவின் விருப்ப ஓய்வு ஏற்கப்படுகிறது. டிஜிபி ((ஹோம்கார்ட்ஸ்) எஸ்.கே.சிங்கலுக்கு, டிஜிபி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளதால், தேர்தலில் போட்டியிட வசதியாக குப்தேஷ்வர் பாண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. காரணம், 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வசதியாக விருப்ப ஓய்வு கடிதத்தை அரசுக்கு பாண்டே அனுப்பினார். ஆனால், மாநில அரசு அவரது விருப்ப ஓய்வு கடிதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், அவர் காவல்துறை பணியில் தொடர்ந்தார். தற்போது அரசியலில் பாண்டே குதிப்பதால், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மேலும் சில
  • நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு; விவசாயிகளின் குரல்களை அடக்கும் ஒன்றிய அரசு: டிராக்டர் ஓட்டிக்கொண்டு வந்த ராகுல் ஆவேசம்



  • உட்கட்சி பூசலால் பாஜ மேலிடம் அழுத்தம்; கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினாமா: பாராட்டு விழாவில் கண்ணீர் விட்டபடி அறிவித்தார்



  • உருமாறிய வைரஸ் ஆபத்தால் 2 ‘டோஸ்’ போட்டவர்களுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி அவசியம்: டிசம்பருக்குள் வந்துவிடும்; எய்ம்ஸ் தலைவர் தகவல்



  • இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே வெடிகுண்டுடன் பறந்த ‘ட்ரோனை’சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை: இரு தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை



  • வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்: அசம்பாவிதங்களை தடுக்க 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு



  • நேற்று முன்தினம் 374 பேர் இறந்த நிலையில் 24 மணி நேரத்தில் 3,998 பேர் பலி?.. ஒன்றிய அரசின் குளறுபடி தகவலால் அதிர்ச்சி



  • இந்தியாவில் முதன்முறையாக பறவை காய்ச்சலுக்கு அரியானா சிறுவன் பலி: தேசிய வைராலஜி நிறுவன ஆய்வில் தகவல்



  • நிர்வாண படங்களை எடுத்தல், வெளியிடுதல் புகாரில் ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது: மும்பை போலீசார் நள்ளிரவில் அதிரடி



  • ‘பெகாசஸ்’ ஒட்டுக் கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் 2வது நாளாக முடங்கியது: எதிர்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை



  • ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 1,000 பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பு: 2 ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]