இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பிரதமர் மோடிக்கு 70வது பிறந்தநாள்: மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து

9/17/2020 5:53:41 PM
சென்னையில் விடியற்காலை முதல் மழை சட்டசபை தேர்தல் குறித்து வடக்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: மாணவர்களுக்கு எதிராக அதிமுக அரசு செய்துவரும் துரோகங்களை மக்களிடம் விளக்கும்படி வலியுறுத்தினார்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பாஜவினர் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், வெளிநாடுகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாஜ தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பலர் டுவிட்டரில் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்  தனது டுவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டும் பிரதமருக்கு   ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ரஷ்ய அதிபர் புதின், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி உள்ளிட்ட உலக தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நேபாள பிரதமர் ஷர்மா ஒலி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘பிறந்த நாளான இந்த புனித நாளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வாழ்த்துக்கள். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நாம் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம்’ என்று கூறியுள்ளார். மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜ சார்பில் நாடு முழுவதிலும் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது. கடந்த 14ல் தொடங்கிய இந்த சேவை வாரம் 20 ம் தேதி வரை நடைபெறுகிறது. கட்சி தொண்டர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சேவை வார விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் போன்ற பணிகளில் பாஜ தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர. மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டெல்லி இந்தியா கேட் பகுதியில் 70 கிலோ மதிப்பிலான லட்டில் மோடியின் பிறந்தநாளை பாஜவினர் கொண்டாடினர். நிகழ்ச்சியில் தேசிய துணைத் தலைவரும், டெல்லி பொறுப்பாளருமான ஷியாம் ஜாஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் பாஜ சார்பில் 70 இடங்களில் நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது.

மேலும் சில
  • மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழு அறிவிப்பு; தமிழக எம்பிக்கள் புறக்கணிப்பு: உறுப்பினராக ஏபிவிபி மாநில தலைவர் சண்முகம் சுப்பையா நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு



  • நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது?... லிட்டருக்கு ரூ6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: துபாயில் இருந்த ரபின்ஸ் ஹமீது கைது



  • 6 மாதங்களுக்கு பிறகு இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி



  • எல்லையில் சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா-அமெரிக்கா புதிய ஒப்பந்தம்: பாதுகாப்பு, தகவல் பரிமாற்றத்தில் ஒத்துழைப்பு



  • உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்



  • பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி : தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்



  • இந்தாண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்



  • கடும் குளிரில் கொரோனா வேகமாக பரவுவதால் டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 2ம் அலை?: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]