இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

யு.எஸ்.ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்: ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ்

9/10/2025 6:22:02 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

நியூயார்க்: யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் அரையிறுதிக்கு ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் முன்னேறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த ஆண்டின் 2வது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யு.எஸ்.ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த ஆடவர் காலிறுதி போட்டியில் ரஷ்யாவின் இளம் டென்னிஸ் நட்சத்திரங்களான டேனில் மெட்வடேவும் (24), ஆண்ட்ரே ரப்லேவும் (22) மோதினர். முதல் செட்டில் இருவருமே தங்களது சர்வீஸ்களை இழக்காமல் முன்னேறினர். இதனால் அந்த செட் டை பிரேக்கர் வரை நீடித்தது. டை பிரேக்கரில் தனது துல்லியமான சர்வீஸ்கள் மூலம் ரப்லேவை திணறடித்த மெட்வடேவ், டை பிரேக்கர் பாயின்ட்டுகளில் 8/6 என்ற கணக்கிலும், முதல் செட்டை 7-6  என்ற கணக்கிலும் வென்றார்.

டை பிரேக்கரை இழந்த சோர்வில் இருந்த ரப்லேவ், 2வது செட்டில் பிரகாசிக்கவில்லை. அவரது சர்வீஸ்களில் பெரும்பாலானவை கோட்டுக்கு வெளியே செல்ல, 2வது செட்டை 6-3 என மெட்வடேவ் எளிதாக கைப்பற்றினார். இருப்பினும் 3வது செட்டில் எழுச்சி கொண்டு எழுந்த ரப்லேவ், அந்த செட்டில் ஒரு கேமையும் இழக்காமல், சரிக்கு சரியாக முன்னேறினார். இதனால் அந்த செட்டும் டை பிரேக்கரை அடைந்தது. டை பிரேக்கரிலும் ரப்லேவ் கடுமையாக போராடினார். ஆனால் அவரது சர்வீஸ்களில் வேகம் குறையவே அதை மெட்வடேவ் நன்கு பயன்படுத்திக் கொண்டார். அந்த டை பிரேக்கரை 7/5 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் 3வது செட்டை 7-6 என வென்றார். இந்த வெற்றியின் மூலம் அவர், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தனது வெற்றி குறித்து மெட்வடேவ் கூறுகையில், ‘‘இப்போட்டியில் ரப்லேவ் எனக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார். ஆனால் ஏற்கனவே பலமுறை ரப்லேவுடன் ஆடியிருக்கிறேன். அதனால் அவரது மூவ்களை என்னால் எளிதாக கணிக்க முடிந்தது. அதனால் டை பிரேக்கர்கள் மூலம் எனக்கு வெற்றி வசமானது. எதிர்காலத்தில் ரப்லேவ் நிச்சயம் அச்சுறுத்தும் வீரராக உருவெடுப்பார்’’ என்று தெரிவித்தார்.

மேலும் சில
  • இங்கிலாந்துக்கு எதிராக இன்று முதல் டி.20 போட்டி: ரோகித்சர்மாவுடன் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக ஆடுவார்..! கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி



  • உலக அளவில் கெத்து... சேப்பாக்கத்தில் 'ஆதிக்கம்' காட்டினால் அஸ்வினை அசைக்க முடியாது



  • இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலக கோப்பை கவுன்டவுன் தொடக்கம்: வெற்றிகரமாக நடத்த கங்குலி உறுதி



  • 5ம் முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை ‘இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி



  • ஐபிஎல் பைனலில் இன்று மும்பையுடன் மோதல்; முதல் முறையாக பட்டம் வெல்லுமா டெல்லி அணி?



  • அபுதாபியில் குவாலிபயர் 2 போட்டி ஐதராபாத்-டெல்லி இன்று பலப்பரீட்சை: இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார்?



  • அபுதாபியில் எலிமினேட்டர் போட்டி ஐதராபாத்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை



  • ஐதராபாத்-பஞ்சாப் இன்று மோதல் தோல்வியில் இருந்து மீளப்போவது யார்?



  • இன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்-டெல்லி மோதல்



  • இன்றிரவு 5வது லீக் ஆட்டம் மும்பை-கொல்கத்தா மோதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]