இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஓட்டலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 13 பேர் மீது போலியாக ‘செக்ஸ் ராக்கெட் கேஸ்’ பதிவு செய்த மாஜி டிஎஸ்பி உட்பட 10 போலீசார் மீது வழக்கு

9/4/2025 2:32:46 PM
திமுகவுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காங்கிரசுக்கு 25 தொகுதி ஒதுக்கீடு கன்னியாகுமரி எம்.பி. தொகுதியிலும் போட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து மதத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறது இந்தியாவை காப்பாற்ற பாஜவை தோற்கடியுங்கள்: சீதாராம் யெச்சூரி ஆவேச பேச்சு

* உத்தரபிரதேச சிபிசிஐடி அதிரடி
* ஓய்வு பெற்ற டிஎஸ்பி மோகல் லால், கடந்த 2019 மக்களவை தேர்தலில் காசியாபாத் தொகுதியில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) சார்பில் போட்டியிட்டு தோற்றார்.

லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஓட்டலில் பாலியல் தொழில் நடத்தியதாக கூறி பொய் ‘கேஸ்’ போட்ட மாஜி டிஎஸ்பி உட்பட 10 போலீசார் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள ஓட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக கூறி 13 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட ஓட்டல் உரிமையாளர், மேலாளர் உட்பட 13 பேர் தரப்பில் ேபாலீசாரின் கைது நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கு நீதிமன்ற உத்தரவுபடி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணை நடத்தியதில், அம்ரோஹாவில் ஓட்டலில் நடத்திய ரெய்டு, கைது நடவடிக்கை ெபாய்யான குற்றச்சாட்டின் கீழ் நடத்தப்பட்டுள்ளது. மேலும், ஆதாரமற்றது என்று தெரியவந்தது.  

கைது செய்யப்பட்ட நபர்களின் அடிப்படை தகவல்கள் கூட ரெய்டின் போது போலீசார் உறுதிப்படுத்தப்படவில்லை. ஓட்டல் உரிமையாளர் தனது மாமன் மகளின் திருமண ஏற்பாடு குறித்து உறவினர்களுடன் பேசியதற்கான ஆதாரத்தை வழங்கி உள்ளார். ஓட்டலில் இருந்தவர்கள் அறை முன்பதிவு செய்து இருந்தார்களா? என்பதை கூட போலீசார் சரிபார்க்கவில்லை. போலீஸ் சமர்பித்த ஆவணங்களில் பல முரண்பாடுகள் இருந்தன. போலி ஆவணங்களை உருவாக்கி கைது செய்துள்ளனர் என்று சிபிசிஐடி கூடுதல் எஸ்பி பிரக்யா மிஸ்ரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி அப்போதைய போலீஸ் டிஎஸ்பியும் ஓய்வுபெற்ற அதிகாரியுமான மோகல் லால், துணை ஆய்வாளர்கள் விஜய் குமார் யாதவ், நீரஜ் குமார், வர்மா மற்றும் கான்ஸ்டபிள்கள் சுரேஷ்குமார், ஹிம்மத் சிங், கிருஷ்ணா பால் சவுகான், மோனு தோமர், சந்தியா தியாகி, ரிது டாக்கா ஆகிய 10 பேர் மீது தற்போது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேற்கண்ட 10 பேர் மீதும் ஐபிசி பிரிவுகள் 166 (அரசு ஊழியராக உள்ளவர் சட்டத்திற்கு கீழ்ப்படியாமல் செயல்பட்டது, காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டது), 203 (குற்றத்தை மறைக்க தவறான தகவல்களைத் தருவது), 342 (சிறைபடுத்தியது) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளது. ஆனால், சிபிசிஐடியின் குற்றச்சாட்டை நிராகரித்த மோகல் லால், ‘அம்ரோஹாவில் பாலியல் தொழில் அதிகரித்து வருவதாக வந்த புகாரையடுத்து ரெய்டு நடத்தப்பட்டது.

முழு நடவடிக்கையும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் செய்யப்பட்டது. ரெய்டு செய்யப்பட்ட வீடியோக்கள் செய்தி சேனல்களில் வெளியாகின. எங்கள் சோதனையில் எந்த தவறும் இல்லை. நாங்கள் தவறு செய்திருந்தால் அது வெளியே வரட்டும்’ என்றார். போலீஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற மோகல் லால், கடந்த 2019 மக்களவை தேர்தலில் காசியாபாத் தொகுதியில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) சார்பில் போட்டியிட்டு தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்



  • திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை



  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]