இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்

8/15/2020 2:44:56 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

சென்னை: 74வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். கட்சி அலுவலகங்களில் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
74வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம், சிற்றரசு, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், பூச்சி முருகன், பகுதி செயலாளர் மா.பா.அன்புத்துரை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுதந்திரதின வாழ்த்து

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: இந்தியத் திருநாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை முத்துக்களாக கோர்த்துக் கொடுத்துள்ள அரசியல் சட்டத்தை நமக்கு அளித்துள்ள இந்த சுதந்திரத்தைப் பெற்றுந்தந்த தியாகிகளின் தியாகங்களை இந்நாளில் எண்ணிப் பார்ப்போம். சுதந்திரப் போராட்டத்தில் எண்ணற்றோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்ததும், அவர்களின் அறவழிப்போராட்டமும்; எல்லாத் தலைமுறையினரும் மனதில் நிலைநிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கருவூலமாகும். பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஆறு அடிப்படை உரிமைகள் கிடைக்கப் போராடிய சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் என்றைக்கும் நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த மதிப்புமிக்க- தன்னலமற்ற தேசப்பணியில் - தமிழர்களின் பங்களிப்பு, எண்ணி எண்ணி இன்றும்  வியக்கத்தக்கது; போற்றத்தக்கது ! “கத்தியின்றி ரத்தமின்றி ஆயுதம் ஏந்தாமல் அகிம்சா யுத்தம் நடத்தி வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டிய அண்ணல் காந்தியடிகள், தமிழ் மண்ணை நேசித்தவர். 14 முறை தமிழகத்துக்கு வந்த காந்தியடிகளுக்கு விடுதலை இயக்கத்துக்கான போர் முறைகளை வகுப்பதில் தமிழகம் ஒரு களமாகப் பயன்பட்டிருக்கிறது” - என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய சுதந்திர தின உரைக்கு ஏற்றாற் போல், கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரங்களில் எல்லாம், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கும், அவர்களது வாரிசுகளுக்குமான “தியாகிகள் பென்ஷன்” உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து - அவற்றைச் செயல்படுத்தியும் காட்டியவர். ஆகவே இந்தச் சுதந்திர தினத்தில், “சாதி, மத, இன வேறுபாடுகளை” அறவே தூக்கியெறிந்து - “சகோதரத்துவம், சமத்துவம்” என்ற பாச உணர்வோடு அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக - அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் - நாட்டின் பன்முகத்தன்மையையும் போற்றிப் பாதுகாத்திட நாம் அனைவரும் உள்ள உறுதியுடன் சபதம் ஏற்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



  • வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்; காஞ்சிபுரம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரையில் பிரம்மாண்ட வரவேற்பு



  • அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை; இபிஎஸ்- ஓபிஎஸ் நாளை பலப்பரீட்சை: 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு



  • 72 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பாடகர் எஸ்பிபி உடல் அடக்கம்: தாமரைப்பாக்கத்தில் திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி



  • வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை மற்றும் புறநகரில் விவசாயிகள்: சாலை மறியல் - தீவிர போராட்டம்



  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை: செட் ஆகாது என்றால் கட்டாயம் அல்ல: தமிழக வேளாண் துறை அமைச்சர், செயலாளர் மீண்டும் உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]