இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர்

8/15/2020 2:32:37 PM
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?

சென்னை: சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட முன்கள பணியாளர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். நாட்டின் 74வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 8.33 மணிக்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார். அப்போது, பல்வேறு துறை அதிகாரிகளை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் திறந்த வாகனத்தில் சென்று காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட்டு, மரியாதையை ஏற்றார். இதையடுத்து, காலை 8.45 மணிக்கு தேசிய கொடியை முதல்வர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகளை முதல்வர் வழங்கினார். இதன்படி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விருது ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனர் செல்வகுமாருக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கல்பனா சாவ்லா விருது, பெரம்பலூர் மாவட்டம், அந்தியூரை சேர்ந்த செந்தமிழ் செல்வி, ஆனந்தவள்ளி, ஆதனூரை சேர்ந்த முத்தம்மாள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கொரோனா பணிக்காக முதலமைச்சரின் சிறப்பு விருது உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் செளமியா சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் விருது வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 27 முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு பதக்கங்களை வழங்கினார். காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் 27 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை முதல்வர் வழங்கினார். கொரோனா ஊரடங்கால் பார்வையாளர்கள் இல்லாமல் விழா நடந்தது.

மேலும் சில
  • தங்கம் விலை மீண்டும் கிடு கிடு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ608 அதிகரிப்பு



  • கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு



  • நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை: மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகலில் ஆலோசனை



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



  • வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்; காஞ்சிபுரம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரையில் பிரம்மாண்ட வரவேற்பு



  • அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை; இபிஎஸ்- ஓபிஎஸ் நாளை பலப்பரீட்சை: 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]