இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள அதிமுக அரசை மக்கள் நம்பியிருக்காமல் சுய பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுங்கள்; மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

8/12/2025 2:18:52 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

சென்னை: அனைத்திலும் தோல்வியடைந்து விட்ட நிலையில், இ-பாஸ் மூலம் அனைவரையும் முடக்கிப் போட்டுள்ள அதிமுக அரசைத் தமிழக மக்கள் இனியும் நம்பியிருக்காமல் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தாங்களே “சுய பாதுகாப்பு” நடவடிக்கைகளில் கவனமாக ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை: கொரோனா நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை மாநில அளவில் 3 லட்சத்திற்கும் அதிகமாகவும், சென்னையில் 1 லட்சத்தையும் தாண்டியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. “3 நாளில் போய் விடும்” “10 நாளில் குறைந்து விடும்” “இது பணக்காரர்கள் வியாதி” என்றெல்லாம் ஏனோதானோ என்று பொறுப்பற்ற முறையில் பேசினார் முதல்வர் பழனிசாமி. திறமையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை, திட்டமிட்டு முறையாக எடுக்க முடியாமல், வெற்று நம்பிக்கையை ஊட்டி, மக்களை நட்டாற்றில் தவிக்க விட்ட அவர் தலைமையிலான அதிமுக அரசின் நிர்வாக தோல்வி இன்றைக்கு இந்திய அளவில் நோய் தொற்றில் 2வது பெரிய மாநிலமாக உருவெடுத்து தமிழகத்திற்கு அவப்பெயரையும், மக்களுக்கு பெரும் பதற்றத்தையும் தேடி தந்து விட்டது. கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 163 சதவீதம் அதிகரித்து விட்டது.

இறந்தோரின் எண்ணிக்கை 228 சதவீதமும், இறப்பு விகிதம் 23 சதவீதமாகவும் எகிறி விட்டது. கொரோனா தொற்று பரவல் 14 சதவீதம் அதிகரித்து  தினமும் 6 ஆயிரம் பேர் மாநில அளவிலும், சென்னையில் 1000 பேரும் தொற்றுக்கு உள்ளாகும் கொடுமை தொடர்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 1224 பேர் இந்த நோயால் மரணமடைந்து - தினமும் “100க்கும் மேற்பட்டோர் இறப்பு” என்ற அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது தமிழகம். ஜனவரி 7ம் தேதியே கொரோனா குறித்து தெரிந்திருந்தும், மார்ச் 7ம் தேதியன்று “முதல் கொரோனா நோய் பாதிப்பு” வரும் வரை நடவடிக்கை எடுக்காமல் குறட்டை விட்டு தூங்கியது இந்த அரசு. முதல் நோய் தொற்று ஏற்பட்ட மார்ச் 7ம் தேதியிலிருந்து மத்திய அரசின் ஊரடங்கு அறிவிப்பிற்காக மார்ச் 24ம் தேதி வரை காத்திருந்ததன் விளைவாக முன்கூட்டியே எடுக்க வேண்டிய நடவடிக்கை அனைத்தையும் கோட்டை விட்டு “கமிஷன் அடிக்கும்” டெண்டர்களில் மட்டுமே  கவனம் செலுத்தியது அதிமுக அரசு.

கோயம்பேடு மார்க்கெட்டை மூடியதில் தாமதம், உயர்நீதிமன்ற தீர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடைகளை திறந்ததில் அவசரம், ஊரடங்கு காலத்தில் 12ம் வகுப்பு மாணவர்களை தேர்வு எழுத வைத்தது, மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் ஊழல், மருத்துவ படுக்கைகள் அடிப்படையில் எத்தனை மருத்துவர், செவிலியர், எவ்வளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன என்பதை மறைத்தது, மாவட்ட வாரியாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவிக்காதது, 444 கொரோனா மரணங்களை மனச்சாட்சியின்றி மூடி மறைத்தது, முன்கள பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் நாட்டிலேயே அதிகமாக தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்தது, கொரோனா தடுப்பு பணிகளில் உயிர்த்தியாகம் செய்த முன்கள பணியாளர்களுக்கு அறிவித்த 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டை 25 லட்சம் ரூபாயாக கருணையின்றி குறைத்து இன்று வரை ஒருவருக்கு கூட இழப்பீடு வழங்காமல் அலைக்கழிப்பது, உயிர்த்தியாகம் செய்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் அறிவிப்பை காற்றில் பறக்க விட்டது.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு நோய்க்குள்ளான ஆயிரக்கணக்கான முன்கள பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அறிவிக்கப்பட்ட 2 லட்சம் ரூபாயை இதுவரை வழங்காதது எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது கூட 1.5 லட்சம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வை நடத்தியே தீருவோம் என்று அடம் பிடிப்பது என்று முதல்வர் பழனிசாமி - மாநில பேரிடர் தலைவர் என்ற முறையில் செய்த அனைத்து நிர்வாக தோல்விகளுக்கும் தனியாக ஒரு பெரிய “அகராதியே வெளியிடலாம். இதுபோன்ற சூழலில் தனக்கு தெரிந்த நிர்வாகம் - மதுக்கடைகளை திறந்து வைத்துக்கொண்டு, “ஊரடங்குகளை பிறப்பிப்பது மட்டுமே” என்று ஒவ்வொரு ஊரடங்காக அறிவித்து - பிறகு பெயரளவிற்கு தளர்வுகளை சொல்லி விட்டு - மக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் “இ-பாஸ்” முறையில் தடுத்து வருகிறது அதிமுக அரசு. ஊழல் தலைவிரித்தாடும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யாமல், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும், வீட்டிற்குள்ளேயே மக்கள் குறிப்பாக வாழ்வாதாரத்தை தேடும் ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், கட்டி போட்டிருப்பதை போல, முடக்கப்பட்டுள்ளார்கள்.

இறப்புகளின் போது தங்களின் உற்றார் உறவினர் முகத்தை கூட பார்க்க முடியாத சோகத்தில் மிதக்கிறார்கள். இனியும் அரசை நம்பி பலனில்லை “நமக்கு நாமே பாதுகாப்பு” என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள் - எது வரினும் வரட்டும் என்று சுய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தற்போது முயற்சி செய்கிறார்கள். கொரோனா பரவி ஏறக்குறைய 7 மாதங்கள் கழித்து இப்போதுதான்  முதல்வர் பழனிசாமி, உண்மை நிலவரம் உணர ஆரம்பித்திருப்பது போல் பேச துவங்கியுள்ளார். “இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முதலிடம்” என்று ஆகஸ்ட் 7ம் தேதி திருநெல்வேலியிலும், அடுத்த நாள் “கொரோனா வைரஸ் நோய் தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது” என்று சேலத்திலும் பேசிய முதல்வர், நேற்றைய தினம் கள்ளக்குறிச்சியில் தனது நிலையை மாற்றி கொண்டுள்ளார். அங்கே பேசிய முதல்வர், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது” என்ற உண்மையை ஒப்பு கொள்ள தொடங்கியிருக்கிறார்.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எல்லாம் எடுத்து சொன்னபோது ஏற்று கொள்ளாமல் வெறும் வாய் சவடாலிலேயே காலத்தை விரயம் செய்துவந்த முதல்வர், தற்போது கொரோனா தொற்று 3 லட்சத்தைத் தொட்டவுடன் “கடுமையான பாதிப்பு” என்ற நிலைமையை எட்டியிருக்கிறார். ஆகவே இதுவரை எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை - குறிப்பாக பிரதான எதிர்க்கட்சி தலைவராக, தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதி, நான் முன்வைத்த பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை ஏற்கவில்லை என்றாலும் இனியாவது மக்களின் பாதிப்பை தயவு செய்து எண்ணி பாருங்கள். நீங்களே கூறியிருப்பது போல் மோசமாகி விட்ட இயல்பு நிலையை மாற்ற ஆலோசனை நடத்துங்கள்.

குடும்பத்திற்கு 5000 ரூபாயும், உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்கி - 3 லட்சத்தை தாண்டியுள்ள கொரோனா பாதிப்பு மேலும் சில லட்சங்களை தொட்டுவிடாமல் இருக்க அனைத்து மருத்துவ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்யுங்கள். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்று அதிமுக அரசு சொன்னது. ஆனால் மார்ச்சில் தொடங்கிய ஊரடங்கு காலம் ஆகஸ்ட் மாதத்தை நெருங்கியபிறகும் பாதிப்பு குறையவில்லை. அப்படியானால் இவர்களுக்கு ஊரடங்கு சட்டங்களை கூட ஒழுங்காக அமல்படுத்த தெரியவில்லை, அதற்கு கூட தகுதி இல்லாதவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. பள்ளி, கல்லூரிகள், பொது போக்குவரத்து, கோயில்கள் தவிர எல்லாம் செயல்பட அனுமதித்து விட்டு, இதனை ஊரடங்கு என்று சொல்வதை போல சட்டக்கேலிக்கூத்து இருக்க முடியாது.

இந்த கண்துடைப்பு நாடகத்தின் மூலமாக லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்ததுதான் அவர்கள் கண்ட பலன். இவ்வளவுக்கு பிறகும் கொரோனா பரவல் தடுக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை - பாதுகாப்பு - ஊரடங்கு - மருந்துகள் - உபகரணங்கள் எதனையும் முறையாக பயன்படுத்தும் சக்தியை இழந்துவிட்ட ‘கோமா’ நிலையை அதிமுக அரசு அடைந்துவிட்டது. இந்த ஊரடங்கை கண்துடைப்பு நாடகமாகவே மக்களில் பெரும்பாலானவர்கள் நினைக்க தொடங்கி விட்டார்கள். இந்த கண்துடைப்பு நாடகத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது என்று மக்கள் கேட்கிறார்கள்.
மதிப்பிற்குரிய தமிழக மக்களே அனைத்திலும் தோல்வியடைந்து விட்ட அதிமுக அரசை இனியும் சிறிது கூட நம்பியிருக்காமல் - கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள “சுய பாதுகாப்பு” நடவடிக்கைகளில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அது ஒன்று தான் உயிர் பாதுகாப்புக்கான ஒரே வழி என்று தோன்றுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



  • வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்; காஞ்சிபுரம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரையில் பிரம்மாண்ட வரவேற்பு



  • அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை; இபிஎஸ்- ஓபிஎஸ் நாளை பலப்பரீட்சை: 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு



  • 72 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பாடகர் எஸ்பிபி உடல் அடக்கம்: தாமரைப்பாக்கத்தில் திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி



  • வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை மற்றும் புறநகரில் விவசாயிகள்: சாலை மறியல் - தீவிர போராட்டம்



  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை: செட் ஆகாது என்றால் கட்டாயம் அல்ல: தமிழக வேளாண் துறை அமைச்சர், செயலாளர் மீண்டும் உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]