இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

8/10/2025 2:53:04 PM
பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு : நடிகை பயல் கோஷ் டுவிட்டால் அதிரும் பாலிவுட் கொரோனா தடுப்பு குறித்து வரும் 23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: அதிக தொற்று பாதிப்புள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம்: மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. தேயிலைத்தோட்ட நிறுவன கணக்கின்படி மண்ணுக்கடியில் இன்னும் 28 பேர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களை தேடும் பணி இன்று 4வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
கேரள மாநிலம் மூணாறு அருகே பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்ட தமிழக தோட்டத்தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் 6 மாத குழந்தை உள்பட17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 8 உடல்கள் அருகில் உள்ள ஆற்றில் இருந்தும், 9 உடல்கள் சகதியில் இருந்தும் மீட்கப்பட்டன. பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

கண்ணன் தேவன் தேயிலை நிறுவன கணக்கின்படி குடியிருப்புகளில் மொத்தம் 83 பேர் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 28 பேர் இன்னும் மண்ணுக்கடியில் புதைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. வருவாய்த்துறை கணக்கின்படி 78 பேர்தான் அங்கு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த 2 கணக்குகளும் தவறு என்று அந்த பகுதியினர் கூறுகின்றனர். ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால் வெளியூரில் படித்துவந்த மாணவர்கள் திரும்பியிருந்தனர் எனவும் கூறுகின்றனர். மூணாறில் படித்துவந்த இன்ஜினியரிங் மாணவர்கள் நிதிஷ், தினேஷ் ஆகியோர் கல்லூரி மூடப்பட்டதால் அவர்களது வீடுகளில் இருந்தனர். இதில் நிதிஷின் உடல் கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் தேயிலை தோட்டத்தின் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் குழந்தையின் பிறந்த நாள் விழா நடந்தது. இதில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள உறவினர்கள் சிலர் வந்திருந்தனர். இவர்கள் திரும்பி சென்றார்களா? என்பது தெரியவில்லை. இவர்களும் நிலச்சரிவில் சிக்கி இருந்தால் பலி எண்ணிக்கை 100ஐ தாண்ட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இன்று காலை 4வது நாளாக மீட்புப்பணி தொடங்கியது. அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.

ஒரே குடும்பத்தினர் 6 பேர் பலி
மூணாறு நிலச்சரிவில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமத்தை சேர்ந்த ராசையா, சரோஜா (எ) மகாலட்சுமி, ஜோஸ்வா, அருண்மகேஸ்வரன், அண்ணாத்துரை, மரியபுஷ்பம் ஆகியோர் மண்ணில் புதைந்துள்ளனர். இவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். பெட்டிமுடியில் தங்கி வேலைபார்த்து வந்தனர். இதில் முதல் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அண்ணாத்துரை, மரியபுஷ்பம் உடல்களை தேடும் பணி நடக்கிறது.

மேலும் சில
  • பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு : நடிகை பயல் கோஷ் டுவிட்டால் அதிரும் பாலிவுட்



  • கொரோனா தடுப்பு குறித்து வரும் 23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: அதிக தொற்று பாதிப்புள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்பு



  • மாநிலங்களவையில் பல்வேறு கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் தாக்கல்: திமுக, காங். உள்ளிட்ட கட்சிகள் காரசார பேச்சு



  • மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு இல்லை; தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஒரேமாதிரி முடிவு



  • மத்திய அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயி தற்கொலை; பஞ்சாப்பில் சோகம்



  • பெங்களூர் விமான நிலையம் வழியாகவும் தங்கம் கடத்தல்: சொப்னா கும்பல் குறித்து அதிர்ச்சி தகவல்



  • ஒரே நாளில் 97,894 பேருக்கு தொற்று: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 51.18 லட்சமாக உயர்வு



  • ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை



  • பிரதமர் மோடிக்கு 70வது பிறந்தநாள்: மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து



  • அரசியல்வாதிகளுக்கு எதிரான 4,600 வழக்குகள் தேக்கம்: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை ஏற்க தயார்: மத்திய அரசு தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]