இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

உரிமம் புதுப்பிக்க லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு; தலைமறைவானதால் கதவை உடைத்து ஆவணங்கள் பறிமுதல்; சீல் வைப்பு

8/9/2025 2:12:14 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

அண்ணாநகர்: தொழிலாளர் நலத்துறையில் உரிமம் புதுப்பிக்க லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி தலைமறைவாகிவிட்டதால் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உடைத்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதுடன் வீட்டுக்கு சீல் வைத்தனர். சென்னை முகப்பேரை சேர்ந்தவர் பரதன். இவர் அப்பகுதியில் மின்னணு எடை எந்திர உதிரிபாகங்கள் விற்பனை செய்து வருகிறார். இவரது கடையின் தொழில் உரிமம் முடிந்துவிட்டதால் அவற்றை புதுப்பிக்க ஆன்லைனில் திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் துறையிடம் கடந்த டிசம்பர் மாதம் விண்ணப்பித்தார். ஆனால் இதற்கு எந்த பதிலும் வரவில்லை என்றதும் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் ஜான் பிரகாஷை நேரில் சந்தித்து பரதன் விளக்கம் கேட்டுள்ளார்.

இதையடுத்து அவர், தொழிலாளர்துறை உதவி ஆணையர் வளர்மதிக்கு 10 ஆயிரம்  ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் உரிமம் புதுப்பிக்கும் விண்ணப்பத்தில் கையொப்பம் இடுவார் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பரதன், அதிகாரி வளர்மதியை சந்தித்து பேசியபோது அவரும் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் விண்ணப்பத்தில் கையெழுத்திடுவேன் என்று கறாராக கூறியதாக தெரிகிறது. ஆனால் பரதன் பணம் கொடுக்க விரும்பவில்லை. இதுகுறித்து சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி லவக்குமாரிடம் பரதன் புகார் செய்தார். இதன் அடிப்படையில், அதிகாரிகள் கொடுத்த தகவல்படி, உதவி ஆய்வாளர் ஜான் பிரகாஷை முதலில் தொடர்புகொண்ட பரதன், 10 ஆயிரம் ரூபாய் வைத்துள்ளேன். எங்கு வந்து தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஓரிரு நாளில் பணத்தை பெற்றுக்கொள்கிறேன் என்று அவர் கூறிய நிலையில், ஜான் பிரகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்துக்கு ரவி என்பவர் பணியமர்த்தப்பட்டார்.

இதன்பிறகு ரவியை தொடர்புகொண்டபோது அவரும் பணம் கேட்டதாக தெரிகிறது. இதுபற்றி பரதன் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் ரவி மற்றும் உதவியாளர் முருகவேல் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டது அறிந்ததும் உதவி ஆணையர் வளர்மதி மாயமானார். இதையடுத்து சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள உதவி ஆணையர் வளர்மதி வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி லவக்குமார் தலைமையில் போலீசார் சென்றபோது அங்கு வளர்மதி இல்லை. இதையடுத்து அதிகாரியின் வீட்டின் கதவை உடைத்து சோதனை நடத்தியபோது முக்கிய ஆவணங்கள் கிடைத்தது. இதனால் அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர். அதிகாரியை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு



  • சவரனுக்கு ரூ128 அதிகரிப்பு: தங்கம் விலை 2வது நாளாக உயர்ந்தது



  • 11 பேர் வழிகாட்டு குழு அமைத்த பிறகே முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு; ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பிடிவாதம்: ஆதரவாளர்களுடன் 2வது நாளாக இன்றும் ஆலோசனை



  • தங்கம் விலை மீண்டும் கிடு கிடு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ608 அதிகரிப்பு



  • கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு



  • நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை: மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகலில் ஆலோசனை



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]