இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இன்ஜி. கல்லூரிகள் செப்.12ல் திறப்பு; உயர்கல்வித்துறை முடிவு...பள்ளிகள், கலைக்கல்லூரிகள் பற்றி முடிவு எடுக்கவில்லை

8/7/2025 2:32:08 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் செப்டம்பர் 12ம் தேதி வகுப்புகளை தொடங்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.  இதற்கான ஆலோசனை கூட்டம் உயர்கல்வித்துறையில் இன்று நடந்தது. தமிழகத்தில் கொரோனா பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமக ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு முடிந்த பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. படிப்படியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தற்போது முடிவுக்கு வருமா வராதா என்ற நிலைஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலைக் கழக மானியக் குழு, அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டன. இதன்படி, பல்கலைக் கழக தேர்வுகளை நடத்துவது, பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சலிங் நடத்துவது, வகுப்புகளை தொடங்குவது தொடர்பாக அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டன.

இதையடுத்து கடந்த மாதம் 15ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகளை எப்போது தொடங்குவது என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, தொழில் நுட்பக் கல்விக் கழக இயக்குநர் விவேகானந்தன், அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சுரப்பா இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து வெளியான அறிவிப்பு: பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும்  இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் தவிர்த்து பிஇ, பிடெக் படிப்புகளில்(பகுதி நேரம்) 3, 5, 7 செமஸ்டர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கும். கடைசி பணிநாள் அக்டோபர் 26ம் தேதி.  செய்முறைத் தேர்வுகள் அக்டோபர் 28ம் தேதி தொடங்கும். செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் 9ம் தேதியுடன் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செமஸ்டருக்கான நாள் டிசம்பர் 14ம் தேதி தொடங்கும். இளநிலை, முதுநிலை படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு சனிக் கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள், கலைக் கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்து தமிழக அரசு இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் சில
  • சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு



  • சவரனுக்கு ரூ128 அதிகரிப்பு: தங்கம் விலை 2வது நாளாக உயர்ந்தது



  • 11 பேர் வழிகாட்டு குழு அமைத்த பிறகே முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு; ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பிடிவாதம்: ஆதரவாளர்களுடன் 2வது நாளாக இன்றும் ஆலோசனை



  • தங்கம் விலை மீண்டும் கிடு கிடு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ608 அதிகரிப்பு



  • கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு



  • நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை: மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகலில் ஆலோசனை



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]