இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் வேலைநிறுத்த போராட்டம்: மாநில தலைவர் பேட்டி

8/6/2025 2:33:19 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

நாமக்கல்: லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என நாமக்கல்லில் மாநில தலைவர் தெரிவித்தார். நாமக்கல்லில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி  நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா ஊரடங்கு காலத்தில் டீசல் விலை லிட்டருக்கு 13  வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசு மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் பெரிய தொழிற்சாலைகள் திறக்கப்படாததால், 50 சதவீத லாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் பெரும் சிரமத்தில் உள்ளாகி, லாரிகளை இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

லாரிக்கான காலாண்டு வரியை, ஏற்கனவே 2 முறை செலுத்தியுள்ளோம். தற்போது லாரி தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளதால், 3வது முறைக்கான காலாண்டு வரியை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். லாரிகள் விபத்துக்களை சந்திக்காத வகையில், எதிரொலிக்கும் ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. மற்ற மாநில அரசுகள் இந்த உத்தரவை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்தப்பட்டுவிட்டது. பெங்களூரை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட தனியார் கம்பெனியில் மட்டும்தான், ஸ்டிக்கர் வாங்கி ஒட்ட வேண்டும் என அறிவித்துள்ளது. இதனால் லாரி ஒன்றுக்கு 6 ஆயிரம் வரை செலவாகும்.

மத்திய அரசு டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட, வாகன கடனுக்கான கால அவகாசத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க வேண்டும். கொரோனா காலத்தில் வாகனங்கள் ஓடாததால் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளதால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிக லாபத்தில் இயங்கி வருகின்றன. எனவே லாரிகளுக்கு இன்சூரன்ஸ் புதுப்பித்தல் 6 மாத காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும். மத்திய அரசு வாகனங்களுக்கான ஓட்டுனர் உரிமம், தேசிய அனுமதி சான்று, வாகன புதுப்பித்தல் சான்றுகள் ஆகியவற்றை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை இன்னும் இரண்டு வார காலத்தில், மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வரும் 20ம் தேதி நாமக்கல்லில் நடைபெறும், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும். அது வேலைநிறுத்தப் போராட்டமாக இருக்கும். இவ்வாறு குமாரசாமி கூறினார். அப்போது மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் சில
  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



  • வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்; காஞ்சிபுரம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரையில் பிரம்மாண்ட வரவேற்பு



  • அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை; இபிஎஸ்- ஓபிஎஸ் நாளை பலப்பரீட்சை: 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு



  • 72 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் பாடகர் எஸ்பிபி உடல் அடக்கம்: தாமரைப்பாக்கத்தில் திரையுலகினர், ரசிகர்கள் இறுதி அஞ்சலி



  • வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை மற்றும் புறநகரில் விவசாயிகள்: சாலை மறியல் - தீவிர போராட்டம்



  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை: செட் ஆகாது என்றால் கட்டாயம் அல்ல: தமிழக வேளாண் துறை அமைச்சர், செயலாளர் மீண்டும் உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]