இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல்

8/3/2025 2:16:39 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

சென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள புதியக் கல்விக் கொள்கைக்கு தமிழக எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும், இதை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள், அமைச்சர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.  மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களும், தமிழக அரசு இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், அமைச்சரவையை கூட்டி புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தியுள்ளனர். இதனால் தமிழகத்தில் எதிர்கட்சியினர் மட்டுமல்ல, கல்வியாளர்கள், கல்வித் துறையை சார்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, பள்ளிக் கல்வித்துறையில் வரும் கல்வி ஆண்டுக்கான பாடம் நடத்துவது, பள்ளிகளை நடத்துவது, பாடத்திட்டங்களை வடிவமைப்பது, மத்திய அரசு கொண்டு வருகின்ற புதிய கல்விக் கொள்கையை எப்படி தமிழகத்தில் செயல்படுத்துவது, அதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்ய ஒரு குழுவை அரசு அமைத்தது.

 அந்த குழுவினர் கடந்த 14ம் தேதி தமிழக அரசிடம் தனது பரிந்துரையை கொடுத்தது. அந்த பரிந்துரையில் புதிய கல்வி கொள்கை மற்றும் தமிழகத்தில் பள்ளிகளை நடத்துவது தொடர்பான பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல உயர்கல்வித் துறையில் உள்ள பிரச்னைகள், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்கள், தேர்வு நடத்துவது, ஆன் லைனில் பாடம் நடத்துவது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது, ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்துவது ஆகியவற்றை ஆய்வு செய்ய அமைச்சர்கள் கொண்ட குழுவை உயர் கல்வித்துறை அமைத்திருந்தது.

 அந்த குழுவும் தனது பரிந்துரையை அரசிடம் கொடுத்திருந்தது. மேற்கண்ட இரண்டு கல்வித்துறைகளின் பரிந்துரைகளையும் சேர்த்து புதிய கல்விக் கொள்கை மீதான விமர்சனங்களையும் உள்ளடக்கி, தமிழகத்தின் நிலைபாட்டை அறிவிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது.   இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை  அமைச்சர் அன்பழகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், முதன்மை கல்வி செயலாளர்  உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், வல்லுனர்கள், தலைமைச் செயலாளர்கள் கலந்து  கொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு பின்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள் அறிவிப்பு: தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக  இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர்.  இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். 1963ம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களை பொறுத்த வரையில், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான  தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில் தான் இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  
 
 இருந்த போதும், 1965ம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய  காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது.  அதனை எதிர்த்து, மாணவர்களும், மக்களும், தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தினர். மக்களிடையே  மும்மொழி கொள்கையைப் பற்றிய கவலைகள் நீங்காததால்,  பேரறிஞர் அண்ணா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 23.1.2025 அன்று ‘தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி விட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது’ என்று வரலாறு போற்றத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றினார்.  

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி, பாட திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது. அண்ணாவால் தெளிவுற உரைக்கப்பட்ட இரு மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது தான் எம்.ஜி.ஆரின் உறுதியான கொள்கையாக இருந்தது.  அதன்படியே, அவர் தமிழ்நாடு முதல்வராக இருந்தபோது, அதாவது, 13.11.2025 அன்று, இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில்  தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
‘இந்தி  பேசாத மாநில மக்கள் மீது  இந்தியை திணிக்கக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளோம்’ என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் சூளுரைத்தார்.   மேலும், இந்தியாவில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.    

இவ்வாறு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்தனர். இப்படிப்பட்ட தலைவர்கள் வழி வந்த இந்த அரசும், மத்திய அரசு, வரைவு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்ட போதே, அதில் மும்மொழிக் கொள்கை இடம் பெற்றதை சுட்டிக் காட்டி, அதனை தீவிரமாக எதிர்த்தது. மேலும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இரு மொழிக் கொள்கையையே கடைபிடிப்போம் என உறுதிபட தெரிவித்து 26.6.2025 அன்றே பிரதமரை வலியுறுத்தி  நான் கடிதம்  எழுதினேன்.  இரு மொழிக் கொள்கையையே தமிழக அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்பதை கடந்த ஆண்டு எனது சுதந்திர தின உரையிலும், சட்டமன்றத்தில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களின்போதும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன்.
தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், இந்த அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது  என்றும்,  இருமொழி கல்விக் கொள்கையை  மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அதிமுக உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே  கொள்கையாக  கொண்டுள்ளனர்.  இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது  புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ, பாதிப்பு ஏற்படும் போது, அந்த பாதிப்பினைக் களைய உடனடி நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும்.
 இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் சில
  • சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு



  • சவரனுக்கு ரூ128 அதிகரிப்பு: தங்கம் விலை 2வது நாளாக உயர்ந்தது



  • 11 பேர் வழிகாட்டு குழு அமைத்த பிறகே முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு; ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பிடிவாதம்: ஆதரவாளர்களுடன் 2வது நாளாக இன்றும் ஆலோசனை



  • தங்கம் விலை மீண்டும் கிடு கிடு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ608 அதிகரிப்பு



  • கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு



  • நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை: மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகலில் ஆலோசனை



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]