இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்

8/3/2025 2:12:58 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

திருமலை: கொரோனா வார்டில் தவிக்கும் நோயாளிகளை டாக்டரோ, நர்ஸ்களோ வந்து கவனிக்காத அவலம் ஆந்திர அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது. மேலும், குப்பை வண்டியில் கொரோனா பாதித்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அநியாயமும் நடக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் 1.58 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 ஆயிரம் பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள நோயாளிகள் சிலர், சரியான சிகிச்சை கிடைக்கவில்லை எனக்கூறி கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அங்கு சிகிச்சை பெறும் வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: இம்மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உரிய சிகிச்சையின்றி சுமார் 1 மணி நேரமாக மூச்சுவிட முடியாமல் தவித்தார். கூச்சலிட்டு டாக்டர்கள், நர்ஸ்களை அழைத்தும் யாரும் வராத நிலையில் சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார். மேலும் மற்றொரு பெண் நோயாளியும் மூச்சுத்திணறலால் படுக்கையிலிருந்து கீழே விழுந்து துடித்தார். அவருக்கும் உதவி செய்ய யாரும் இல்லை. டாக்டர்கள், நர்ஸ்கள் காலையில் மட்டும் மருந்து, மாத்திரைகளை வழங்கிவிட்டு சென்று விடுகிறார்கள். அதன்பிறகு கண்டுகொள்வதில்லை. கொரோனாவால் பாதித்து இறந்தவர் சடலத்தை பல மணி நேரமாக அதே இடத்தில் விட்டு விடுவதோடு சடலத்தை எடுத்துச்சென்ற பிறகு அதே படுக்கையை சுத்தம் செய்யாமல் வேறு ஒரு நோயாளிக்கு வழங்குகின்றனர்.

அதேபோல், கழிவறைகள் மிக மோசமாக உள்ளது. இப்பிரச்னைகள் தீர முதல்வர் ஜெகன்மோகன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த வாலிபர் வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார். குப்பை வண்டியில் நோயாளிகள் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் ஜராஜப்புபேட்டா என்ற நகரத்தில் உள்ள 3 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. அவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் நகராட்சி அதிகாரிகள், குப்பை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியுள்ளது.

மேலும் சில
  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



  • கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அக். 28, நவ. 3, நவ. 7ல் வாக்குப்பதிவு; நவ. 10ல் ரிசல்ட் 65 தொகுதி இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிப்பு



  • கலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திடக் கோரி குடியரசு தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம்



  • திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே ரூ200 கோடி மதிப்பில் ஓய்வறை: இருமாநில முதல்வர்கள் அடிக்கல் நாட்டினர்



  • ‘சிறந்த உழைப்பாளரை இழந்து விட்டோம்’மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடிக்கு மோடி இரங்கல்



  • பீகார் போலீஸ் டிஜிபி விருப்ப ஓய்வு: அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிட திட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]