இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

8/3/2025 2:11:37 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். தொழில்போட்டி, காதல் விவகாரம் போன்ற காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின்பேரில் தற்கொலைக்கு தூண்டுதல், திருட்டு, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது பீகார் மாநில பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே பாட்னாவில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டும் என நடிகை ரியா சக்கரபோர்த்தி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், பீகார் போலீஸ் ‘டீம்’ ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை நடத்த நேற்றிரவு மும்பைக்குச் சென்றது. பீகார் போலீஸ் எஸ்பி பினாய் திவாரி தலைமையிலான டீம் மும்பை சென்று இறங்கியதும், அவர்களை அங்கிருந்த கொரோனா பரவல் தடுப்பு குழு மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்பு அதிகாரிகள் இடையே வாக்குவாதம் நடைபெற்றதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக பீகார் போலீஸ் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஐபிஎஸ் அதிகாரி பினாய் திவாரி, போலீஸ் டீமுடன் இன்று (நேற்றிரவு) பாட்னாவிலிருந்து ஒரு வழக்கு விசாரணைக்காக மும்பைக்கு சென்றார். ஆனால் அவரை இரவு 11 மணியளவில் மும்பை மாநகர அதிகாரிகள் கொரோனா விதிமுறைகளை காட்டி பலவந்தமாக தனிமைப்படுத்தினர். மேலும், அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படவில்லை. நீண்ட இழுபறிக்கு பின்னர் தற்போது அவர்கள் ஒரு விருந்தினர் மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பீகார் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், ‘நடிகை ​​ரியா சக்கரபோர்த்தியை நான்கு நாட்களாக காணவில்லை. அவரது தொலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. ரியா உரிய ேநரத்தில் விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராக விரும்புகிறோம். அவரிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம். சுஷாந்த் வழக்கு குறித்து எவ்வித சார்பும் அற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றார்.

மேலும் சில
  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



  • கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அக். 28, நவ. 3, நவ. 7ல் வாக்குப்பதிவு; நவ. 10ல் ரிசல்ட் 65 தொகுதி இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிப்பு



  • கலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திடக் கோரி குடியரசு தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம்



  • திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே ரூ200 கோடி மதிப்பில் ஓய்வறை: இருமாநில முதல்வர்கள் அடிக்கல் நாட்டினர்



  • ‘சிறந்த உழைப்பாளரை இழந்து விட்டோம்’மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடிக்கு மோடி இரங்கல்



  • பீகார் போலீஸ் டிஜிபி விருப்ப ஓய்வு: அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிட திட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]