இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு

8/2/2025 3:04:31 PM
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு; விவசாயிகளின் குரல்களை அடக்கும் ஒன்றிய அரசு: டிராக்டர் ஓட்டிக்கொண்டு வந்த ராகுல் ஆவேசம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 968 எஸ்ஐகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

அயோத்தி: வரும் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட உ.பி முதல்வர் இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறார். காெணாலி மூலம் விழா நிகழ்ச்சிகளில் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. முன்னதாக கடந்த 31ம் தேதி ராமர் கோயில் விழாவிற்கு யமுனோத்ரி, யமுனை  நதிகளில் இருந்து புனித நீர், இமயமலை பகுதியில் வளரும் பிரம்ம கமல் பூ,  ஆகியவற்றை பூசாரிகள் விஷ்வா இந்து பரிஷத் அலுவலக பொறுப்பாளர்களிடம்  ஒப்படைத்தனர். அயோத்தி முழுவதையும் அலங்கரிப்பதற்கான ஏற்பாடுகள்  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

ராமர் கோயில் பணிகள் குறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (ஆக. 2) ஆய்வு மேற்ெகாள்ள ஒரே வாரத்தில் 2வது முறையாக அயோத்திக்கு வந்தார். இதனால் மாநிலத்தின் மதுரா, வாரணாசி, சித்ராகூட், பிரயாக்ராஜ் மற்றும் கோரக்பூர், நைமிசாரண்யம் ஆகிய பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதால் 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக  உள்ளதாக கூறப்படுகிறது. நேற்றிரவு அயோத்தியின் பல பகுதிகள் மண் விளக்குகள் மற்றும் வண்ணமயமான விளக்குகளால் ஒளிரவிடப்பட்டன. இந்நிலையில், ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் சார்பில், சிறப்பு அழைப்பாளர்களுக்கு மஞ்சள் நிறத்தில் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் பிரதமர் மோடியின் வருகை குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர் உமா பாரதி, ராம் கோயில் இயக்கத்துடன் தொடர்புடைய சாத்வி ரித்தம்பாரா, பாபர் மஸ்ஜித் உறுப்பினராக இருந்த இக்பால் அன்சாரி, ராஜேந்திரதேவாச்சார்யா ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடி வரும் 5ம் தேதி காலை 11.15 மணிக்கு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சாகேத் கல்லூரிக்கு வருகிறார். அங்கிருந்து அனுமன் காரி கோயிலுக்குச் சென்றபின், பூமி பூஜை நடைபெறும் இடத்துக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அயோத்தியில் சுமார் 2 மணி நேரம் மட்டும் இருக்கும் பிரதமர் மோடி, அதன்பின்னர் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் விழாவில் நேரடியாக பங்கேற்கவில்லை. அதேநேரத்தில், இரு தலைவர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விழாவில் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவித்தன.

மேலும் சில
  • நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு; விவசாயிகளின் குரல்களை அடக்கும் ஒன்றிய அரசு: டிராக்டர் ஓட்டிக்கொண்டு வந்த ராகுல் ஆவேசம்



  • உட்கட்சி பூசலால் பாஜ மேலிடம் அழுத்தம்; கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினாமா: பாராட்டு விழாவில் கண்ணீர் விட்டபடி அறிவித்தார்



  • உருமாறிய வைரஸ் ஆபத்தால் 2 ‘டோஸ்’ போட்டவர்களுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி அவசியம்: டிசம்பருக்குள் வந்துவிடும்; எய்ம்ஸ் தலைவர் தகவல்



  • இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே வெடிகுண்டுடன் பறந்த ‘ட்ரோனை’சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை: இரு தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை



  • வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்: அசம்பாவிதங்களை தடுக்க 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு



  • நேற்று முன்தினம் 374 பேர் இறந்த நிலையில் 24 மணி நேரத்தில் 3,998 பேர் பலி?.. ஒன்றிய அரசின் குளறுபடி தகவலால் அதிர்ச்சி



  • இந்தியாவில் முதன்முறையாக பறவை காய்ச்சலுக்கு அரியானா சிறுவன் பலி: தேசிய வைராலஜி நிறுவன ஆய்வில் தகவல்



  • நிர்வாண படங்களை எடுத்தல், வெளியிடுதல் புகாரில் ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது: மும்பை போலீசார் நள்ளிரவில் அதிரடி



  • ‘பெகாசஸ்’ ஒட்டுக் கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் 2வது நாளாக முடங்கியது: எதிர்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை



  • ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 1,000 பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பு: 2 ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]