இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கடலூர் அருகே பயங்கரம்; மாஜி பஞ். தலைவரின் தம்பி படுகொலை: 25 படகுகளுக்கு தீ வைப்பு

8/2/2025 3:03:40 PM
டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் 2 ஆசிரியைகள் தலைமறைவு: தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர் மருத்துவ பரிசோதனைகளுக்காக நடிகர் ரஜினி அமெரிக்கா புறப்பட்டார்

கடலூர்: கடலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அப்பகுதியில் இருந்த 25 படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும், வீடுகள், பைக்குகள் சேதப்படுத்தப்பட்டது. அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் அடுத்த தாழங்குடா மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் குண்டு உப்பலவாடி முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். இவரது தம்பி மதிவாணன்(36). இவர் நேற்று இரவு சொந்த வேலையாக வௌியூர் சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து ஒரு கும்பல் வந்துள்ளது.

இதை கண்ட அவர் பைக்கை நிறுத்தி நீங்கள் யார், எதற்காக என்னை பின்தொடர்ந்து வருகிறீர்கள்? என கேட்டுள்ளனர். அப்போது, அந்த கும்பல் திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொலை செய்ய முயன்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த மதிவாணன் அவர்களிடம் இருந்து தப்பியோடினார். இதையடுத்து, அந்த கும்பல் அவரை விரட்டி சென்று சரமாரியாக கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில், ரத்த வெள்ளத்தில் மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற கடலூர் புதுநகர் போலீசார் மதிவாணன் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், மாசிலாமணி தரப்பினருக்கும், தற்போது, பஞ்சாயத்து தலைவராக உள்ள மதியழகன் மனைவி சாந்தி தரப்பினருக்கும் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்ததுள்ளது. இதனால், கொலை நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடற்கரை பகுதியில் நிறுத்தப் பட்டிருந்த 25 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் இருந்த 6 வீடுகள், பைக்குகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டது. கொலை ெதாடர்பாக அப்பகுதியை சேர்ந்த 30 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளளனர்.

மேலும் சில
  • டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் 2 ஆசிரியைகள் தலைமறைவு: தனிப்படை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்



  • மருத்துவ பரிசோதனைகளுக்காக நடிகர் ரஜினி அமெரிக்கா புறப்பட்டார்



  • பப்ஜி விளையாட்டில் பெண்களிடம் ஆபாச பேச்சு: யூடியூபர் மதனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை: நெருக்கமான தோழிகளின் பட்டியலை சேகரித்து விசாரிக்க முடிவு



  • தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாள் முடிகிறது: பொது போக்குவரத்துக்கு அனுமதி?: மருத்துவர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் ஆலோசனை



  • தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் 200க்கும் கீழ் சரிந்த கொரோனா



  • அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டன் மதுரையில் பதுங்கல்?.. 2 தனிப்படை போலீசார் விரைந்தனர்



  • ‘‘ஜெ. எல்லாவற்றையும் பார்க்கிறார் அவர் நமக்கு துணையிருப்பார்’’: சசிகலா ஆடியோ அரசியல்



  • கலைஞர் நினைவு நூலக கட்டிடம் உள்பட 11 கட்டுமான பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு



  • 2ம் தவணையாக கொரோனா நிவாரண உதவி; ஆழ்வார்பேட்டை, நந்தனம் ரேஷன் கடைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு: பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கினார்



  • நடிகையுடன் 5 ஆண்டு குடும்பம் நடத்தி ஏமாற்றிய வழக்கு; அதிமுக மாஜி அமைச்சர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]