இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்

8/2/2025 3:02:11 PM
வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாக சொப்னா கும்பல், 21 முறை தங்கம் கடத்தியது தற்போது தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் சொப்னாவுக்கு பெரும் செல்வாக்கு உண்டு. துணைதூதர் மற்றும் அட்டாஷே என்று அழைக்கப்படும் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களையும் சொப்னா தனது கைக்குள் வைத்திருந்தார். இதை தெரிந்துதான் சந்தீப் நாயர், சரித்குமார், ரமீஸ், பைசல் பரீத் ஆகியோருக்கு தூதரக பார்சலில் தங்கம் கடத்தும் தைரியம் வந்தது. சொப்னாவும் அதற்கு உடன்பட்டார். கடந்த ஆண்டு ஜூனில்தான் கடத்தல் தொடங்கி உள்ளது. முதலில் தங்களது திட்டம் பலிக்குமா? என்பதை பரிசோதிக்க, உணவு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அடங்கிய 2 மாதிரி பார்சல்களை அனுப்பி வைத்தனர். அவை எந்த சிக்கலும் இல்லாமல் கைக்கு வந்து சேர்ந்துள்ளன. அதன் பிறகே அவர்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது. தொடர்ந்து கடந்த ஜூன் வரை 21 பார்சல்களில் தங்கம் கடத்தி உள்ளனர்.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் மிக அதிகளவில் தங்கம் கடத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு பார்சலிலும் அதிகபட்சமாக 3.50 கிலோ தங்கம் கடத்தியதாக சுங்க இலாகாவிடம் இந்த கும்பல் கூறியுள்ளது. ஆனால் அதை சுங்க இலாகா நம்பவில்லை. ஒவ்வொரு பார்சலிலும் குறைந்தது 5 முதல் 10 கிலோ வரை கடத்தியிருக்கலாம் என்று சுங்க இலாகா கருதுகிறது. கடந்த ஜூன் 24ம் தேதி வந்த பார்சலில் 16.50 கிலோவும், 28ம் தேதி 25 கிலோவும் இவர்கள் கடத்தி உள்ளனர். ஒவ்வொரு முறையும் தங்கத்தின் எடையை அதிகரித்து வந்துள்ளனர். கடைசியாக ஜூன் 30ம் தேதி சிக்கிய பார்சலில் மிக அதிகமாக 30 கிலோ தங்கத்தை கடத்தி உள்ளனர். இதுவரை எவ்வளவு தங்கம் கடத்தினோம் என்று சொப்னா கும்பல் விசாரணை அமைப்புகளிடம் கூறவில்லை. ஒவ்வொருவரும் வேறுவேறு கணக்கை கூறுகின்றனர். இதனால் உண்மையாக கடத்தப்பட்ட தங்கத்தின் அளவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று சுங்க இலாகா கருதுகிறது.

சொப்னா கும்பல் ஒவ்வொரு முறையும் அதிகாரிகளை குழப்பும் வகையிலேயே வாக்குமூலம் கொடுத்து வருகின்றனர். தங்கம் கடத்தல் குறித்து அட்டாஷே ராஷித் காமிஸ் அல்சலாமிக்கு தெரியும் எனவும், ஒவ்வொரு முறையும் தங்கம் கடத்தும் போது 1,500 டாலர் கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளனர். இது குறித்து அட்டாஷேயிடம் விசாரித்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும். அவர் துபாயில் இருப்பதாலும், மத்திய அரசின் அனுமதியில்லாமல் விசாரணை நடத்த முடியாது என்று தெரியும் என்பதாலும் தான் சொப்னா கும்பல் தங்களை குழப்புவதாக அதிகாரிகள் கருதுகின்றனர். இதற்கிடையே தங்கத்தின் அளவை குறைத்து கூறி அட்டேஷேவை தாங்கள் ஏமாற்றியதாகவும் சந்தீப் நாயர் சுங்க இலாகா அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் கடத்தப்படும் தங்கத்தின் உண்மையான எடையை கூறினால், கூடுதல் பணம் கேட்பார் என்பதால் 3 கிலோ தங்கம் கடத்துவதாக அட்டேஷேயிடம் கூறியதாக சந்தீப் நாயர் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கும் பலமடங்கு அதிகமாக பலமுறை தங்கம் கடத்தி உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சில
  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



  • கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அக். 28, நவ. 3, நவ. 7ல் வாக்குப்பதிவு; நவ. 10ல் ரிசல்ட் 65 தொகுதி இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிப்பு



  • கலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்திடக் கோரி குடியரசு தலைவருக்கு 32 எம்பிக்கள் கடிதம்



  • திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே ரூ200 கோடி மதிப்பில் ஓய்வறை: இருமாநில முதல்வர்கள் அடிக்கல் நாட்டினர்



  • ‘சிறந்த உழைப்பாளரை இழந்து விட்டோம்’மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடிக்கு மோடி இரங்கல்



  • பீகார் போலீஸ் டிஜிபி விருப்ப ஓய்வு: அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிட திட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]