இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது குவியும் புகார்கள்: ஏடிஎஸ்பி விசாரணை

7/31/2020 2:34:09 PM
7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது புகார்கள் குவிந்து வருகிறது. இது தொடர்பாக ஏடிஎஸ்பி விசாரணை நடத்தினார். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐகள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை மற்றும் போலீசார் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், சாத்தான்குளத்தை சேர்ந்த அழகுஜார்ஜ் என்பவரையும் தாக்கி சித்ரவதை செய்ததாக சாத்தான்குளம் எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலை சம்பவத்திற்கு முன்னரே பேய்க்குளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரை சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதில் அவர் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சம்பவத்தில் அவரது தாய் வடிவு மதுரை ஐகோர்ட் கிளையில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு டிஎஸ்பி அணில்குமார் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே சாத்தான்குளத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரகுகணேஷ் மீது மேலும் இருவர் கடந்த 28ம் தேதி எஸ்பியிடம் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் அருகேயுள்ள ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த யாக்கோபுராஜ் என்பவர் அளித்த புகார்: நான் பனையேறும் தொழில் செய்து வருகிறேன். கடந்த 23.5.2025 அன்று மாலை 7 மணியளவில் மீரான்குளம் பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த எஸ்ஐ ரகுகணேஷ் என்னை வலுக்கட்டயமாக காரில் ஏற்றி பழனியப்பபுரம் காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருடன் இருந்த 5 பேர் என்னை சரமாரியாக தாக்கினர். பின்னர் 10 மணியளவில் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் முன்னிலையில் மீண்டும் என்னை தாக்கினர்.

பின்னர் என்மீது பொய்வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். என்மீது புகார் கொடுத்த மகேந்திரன் என்பவர் யார் என்றே எனக்கு தெரியாது. என்னை தங்களது சுயலாபத்திற்காக தாக்கி, பொய் வழக்குபதிவு செய்த இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மற்றும் 5 பேர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இதற்கிடையே போலீசார் தாக்கியதில் இறந்ததாக கூறப்படும் மகேந்திரனுடன் சம்பவ நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்த அவரது மாமா தங்கவேல் என்பவர் எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் அளித்துள்ளார். அதில் கடந்த 23.05.2020ல் அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த என்னை சாத்தான்குளம் எஸ்ஐ ரகு கணேஷ் மற்றும் சில நபர்கள் என் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்து என்னை தாக்கி தூக்கிச் சென்றனர். அப்போது காருக்குள் எனது மருமகன் மகேந்திரனும் இருந்தார். அடுத்த நாள் இரவு முழுவதும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்தோம். அங்கு மகேந்திரன் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டனர்.

என் அருகே மீரான்குளம் யாக்கோபுராஜ் என்பவர் போலீசார் தாக்கியதில் சுயநினைவு இன்றி கிடந்தார். எங்களிடம் வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு என்னையும் மகேந்திரனையும் விடுவித்தனர்.இந்நிலையில் எங்களிடம் கையெழுத்து பெற்றுக்கொண்ட வெள்ளை தாள் மூலம் எங்களிடம் யாக்கோபுராஜ் பணம் கேட்டு மிரட்டியதாக போலி புகார் தயார் செய்து, நாங்கள் முன் பின் பார்த்திராத யாக்கோபுராஜ் மீது எஸ்ஐ ரகுகணேஷ் பொய்வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த விபரம் தற்போது தான் எங்களுக்கு தெரிய வந்துள்ளது. எனவே இதுகுறித்து போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். எஸ்பி ஜெயக்குமார் இந்த புகார் குறித்து விசாரணை நடத்த ஏடிஎஸ்பி கோபிக்கு உத்தரவிட்டார். இது தொடர்பான விசாரணைக்கு யாக்கோபுராஜ் உள்ளிட்டவர்கள் தூத்துக்குடி எஸ்பி அலுவலகம் வந்திருந்தனர். அவர்களிடம் ஏடிஎஸ்பி விசாரணை நடத்தினார். தொடர்ந்து சாத்தான்குளம் போலீசார் மீது அடுக்கடுக்காக குவியும் புகார்களால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • 7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்



  • முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆயுத பூஜை வாழ்த்து



  • பள்ளி, தியேட்டர் திறப்பு தொடர்பாக 28ம் தேதி கலெக்டர்கள், மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை



  • மருத்துவக் கல்வியைப் போன்று இன்ஜி. படிப்புக்கு நுழைவு தேர்வு தேவையில்லை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்



  • அதிகாரிகளின் அலட்சியத்தால், மழையில் நனைந்த 2000 மூட்டை நெல் முளைத்தது: தஞ்சை அருகே கொள்முதல் நிறுத்தம்



  • மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம் சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை: அரசு பள்ளி மாணவர்கள் கனவு நிறைவேறுமா?



  • சட்டசபை தேர்தல் வெற்றி வியூகம் குறித்து கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: மாலையில் சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு



  • மாதவரத்தில் நகை பறித்த 3 பேர் கைது: 12 சவரன், 2 பைக் பறிமுதல்



  • மாஸ்க் மூலம் கலர்புல் உடை: மாஸ் காட்டிய திருநங்கை: சிந்திக்க வைத்தது கொரோனா



  • கல்லூரி உதவி பேராசிரியர் தகுதிக்கான நெட் தேர்வு நவ. 19ல் நடைபெறும்: தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]