இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பிளஸ் 1 பொது தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி

7/31/2020 2:29:29 PM
7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்

* வழக்கம்போல் மாணவிகளே அதிக தேர்ச்சி
* கோவை மாவட்டம் முதலிடம்

சென்னை: பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மாவட்டம் அதிக அளவில் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்தது.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 7249 மேல்நிலைப்பள்ளிகளில் படித்த பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்தவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 30 ஆயிரத்து 654 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத பதிவு செய்து இருந்தனர். இதில் பள்ளி வாயிலாக 8 லட்சத்து 15 ஆயிரத்து 442 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவிகள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 881 பேர். மாணவர்கள் 3 லட்சத்து 79 ஆயிரத்து 561 பேர். பொது பாடப்பிரிவில் 7 லட்சத்து 63 ஆயிரத்து 424 பேர் தேர்வு எழுதினர். தொழிற் பாடப்பிரிவில் 52 ஆயிரத்து 18 பேர் எழுதியிருந்தனர்.

இந்த நிலையில் பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவியர் 97.49 சதவீதம் பேர். மாணவர்கள் 94.38 சதவீதம் பேர். வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியர் 3.11 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகள் மூலமாக 8,15,442 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,83,160 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அமைந்துள்ள மேல்நிலைப்பள்ளிகள் 7249. இதில் 2716 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. அரசு பள்ளிகள் 92.71 சதவீதம், அரசு உதவி பெறு பள்ளிகள் 96.95 சதவீதம், மெட்ரிக் பள்ளிகள் 99.51 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 96.20 சதவீதம், பெண்கள் பள்ளிகள் 97.56 சதவீதம், ஆண்கள் பள்ளிகள் 91.77 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

பாடப்பிரிவுகளை பொறுத்தவரை அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.33 சதவீதம் பேரும், வணிகவியலில் 96.28 சதவீதம், கலைப்பிரிவுகள் 94.11 சதவீதம், தொழிற் பாடப்பிரிவுகள் 92.77 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியல் பாடப்பிரிவில் 96.68 சதவீதம், வேதியியல் பாடப்பிரிவில் 99.95 சதவீதம், உயிரியலில் 97.64, கணிதம் 98.56 சதவீதம், தாவரவியல் 93.78 சதவீதம், விலங்கியல் 94.53 சதவீதம், கணினி அறிவியல் 99.25 சதவீதம், வணிகவியல் 96.44 சதவீதம், கணக்குப் பதிவியல் 98.16 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அளவில் கோவை மாவட்டத்தில் 98.10 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் 97.90 சதவீத தேர்ச்சியுடன் 2வது இடத்தையும், கரூர் மாவட்டத்தில் 97.51 சதவீதம் பேர் ேதர்ச்சி பெற்று 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். மாற்று திறனாளிகள் 2819 பேர் தேர்வு எழுதினர். இதில் 2672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள பிளஸ் 1 தேர்வில் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 மறு தேர்வில் 180 பேர் தேர்ச்சி
பிளஸ் 2 இறுதி தேர்வு கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நடந்தது. இதில் 34 ஆயிரம் பேர் தேர்வு எழுத முடியாமல் போயினர். இவர்களுக்கு கடந்த 27ம் தேதி மறு தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 519 பேர் தான் எழுதினர். இந்த தேர்வுக்கான விடைத்தாள்கள் இரண்டு நாட்களில் திருத்தப்பட்டது. தொடர்ந்து இந்த மறு தேர்வுக்கான ரிசல்ட் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 180 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் சில
  • 7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்



  • முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆயுத பூஜை வாழ்த்து



  • பள்ளி, தியேட்டர் திறப்பு தொடர்பாக 28ம் தேதி கலெக்டர்கள், மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை



  • மருத்துவக் கல்வியைப் போன்று இன்ஜி. படிப்புக்கு நுழைவு தேர்வு தேவையில்லை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்



  • அதிகாரிகளின் அலட்சியத்தால், மழையில் நனைந்த 2000 மூட்டை நெல் முளைத்தது: தஞ்சை அருகே கொள்முதல் நிறுத்தம்



  • மருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம் சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை: அரசு பள்ளி மாணவர்கள் கனவு நிறைவேறுமா?



  • சட்டசபை தேர்தல் வெற்றி வியூகம் குறித்து கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை: மாலையில் சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு



  • மாதவரத்தில் நகை பறித்த 3 பேர் கைது: 12 சவரன், 2 பைக் பறிமுதல்



  • மாஸ்க் மூலம் கலர்புல் உடை: மாஸ் காட்டிய திருநங்கை: சிந்திக்க வைத்தது கொரோனா



  • கல்லூரி உதவி பேராசிரியர் தகுதிக்கான நெட் தேர்வு நவ. 19ல் நடைபெறும்: தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]