இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பெண் சகவாசத்தால் ஏற்பட்ட நம்பிக்கை துரோகம்: சப்பாத்தியில் விஷம் வைத்து நீதிபதி, மகன் கொலை: மந்திரவாதி உட்பட 6 பேர் கும்பல் கைது

7/30/2020 3:14:41 PM
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு; விவசாயிகளின் குரல்களை அடக்கும் ஒன்றிய அரசு: டிராக்டர் ஓட்டிக்கொண்டு வந்த ராகுல் ஆவேசம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 968 எஸ்ஐகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

போபால்: மத்திய பிரதேசத்தில் பெண் சகவாசத்தால் ஏற்பட்ட நம்பிக்கை துரோகத்தால் நீதிபதி, அவரது மகன் ஆகியோர் சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி சப்பாத்தியில் விஷம் வைத்து கொல்லப்பட்டனர். இந்த கொலையை செய்த மந்திரவாதி, பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மத்தியபிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மகேந்திர குமார் திரிபாதி (56) மற்றும் அவரது மகன் அபியான்ராஜ் திரிபாதி (33) ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் உணவு ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து 5 நாட்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் நீதிபதியும், அவரது மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மருத்துவக் குழு மற்றும் போலீசாரின் விசாரணையில், நீதிபதி மற்றும் அவரது மகன் ஆகியோர் சாப்பிட்ட சப்பாத்தியில் விஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், ‘கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, மற்றும் அவரது மகனின் மரணங்கள் தொடர்பாக ஒரு பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிந்த்வாரா மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சந்தியா சிங் (45) என்ற பெண், ‘குடும்பத்தில் நல்லிணக்கம்’ ஏற்படுவதற்காக விஷம் கலந்த கோதுமை மாவை நீதிபதியின் குடும்பத்திற்கு வழங்கி உள்ளார். சம்பவம் நடந்த 20ம் தேதி, நீதிபதியின் வீட்டிற்கு கோதுமை மாவை அந்த பெண் கொண்டு வந்துள்ளார். அதேநாளில் நீதிபதியின் மனைவி அதை சமைத்துள்ளார். அன்று இரவு விஷ சப்பாத்தியை சாப்பிட்டு நீதிபதியும் அவரது இரண்டு மகன்களும் வாந்தியெடுக்கத் தொடங்கினர். தொடர் சிகிச்சைக்கு பின், 25ம் தேதி நீதிபதி மற்றும் அவரது மூத்த மகன் இறந்தனர். நீதிபதியின் இளைய மகன் ஆஷிஷ் தொடர் சிகிச்சையில் உள்ளார். கைதான சந்தியா சிங்கிடம் விசாரணை நடத்திய போது, நீதிபதி சிந்த்வாராவில் பணியாற்றிய போது அவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர்.

ஆனால், பெதுல் மாவட்டத்துக்கு நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்ட பின், கடந்த 4 மாதங்களாக அந்த பெண்ணிடம் நீதிபதி தொடர்பில் இல்லை. அதனால், ஆத்திரமடைந்த சந்தியா சிங், நீதிபதி மகேந்திர குமார் திரிபாதி மற்றும் அவரது முழு குடும்பத்தினரை ஒழிக்க திட்டமிட்டார். இதற்கிடையே, ‘குடும்பத்தில் நல்லிணக்கம்’ பெறவேண்டி உள்ளதால் பூஜையில் வைத்து வழிபாடு செய்வதற்காக கோதுமை மாவு கொடுக்குமாறு சந்தியா சிங், நீதிபதியிடம் கேட்டுள்ளார். அவரும் கோதுமை மாவு ெகாடுத்துள்ளார். இதற்காக, ‘அமா னுஷ்ய’ பாபா என்று அழைக்கப்படும் சாமியார் ராம்தயால் என்பவரை சந்தியா சிங் சந்தித்து, நீதிபதியின் குடும்பத்தை ஒழிக்க உதவி கேட்டுள்ளார்.

சாமியார் உட்பட டிரைவர் சஞ்சு, தேவில்லால் சந்திரவன்ஷி, முபின் கான், கமல் ஆகியோரின் ஆலோசனையின்படி சப்பாத்தி தயார் செய்யப்படும் கோதுமை மாவில் விஷம் கலக்கப்பட்டது. பின்னர் அதனை சந்தியா சிங், நீதிபதி வீட்டிற்கு சென்று கொடுத்தார். அதனை அவர்கள் சமைத்து சாப்பிட்டதில் நீதிபதியும், அவரது மகனும் இறந்துவிட்டனர். குற்றம்சாட்டப்பட்ட பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்’ என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சிமலா பிரசாத் கூறுகையில், ‘சந்தியா சிங் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிந்த்வாராவில் நீதிபதியுடன் தொடர்பில் இருந்தார். நீதிபதி பெதுலுக்கு இடமாறிய பின்னர், ​​சந்தியாவால் அவரை சந்திக்க முடியவில்லை. இதனால், இருவருக்கும் இடையே கசப்புணர்வு ஏற்பட்டது. பணம் கேட்டும் சந்தியா சிங் நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மந்திரவாதியான ராம்தயால் பாபா உதவியுடன் நீதிபதியின் குடும்பத்தை திட்டமிட்டு கோதுமை மாவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்’ என்றார்.

மேலும் சில
  • நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு; விவசாயிகளின் குரல்களை அடக்கும் ஒன்றிய அரசு: டிராக்டர் ஓட்டிக்கொண்டு வந்த ராகுல் ஆவேசம்



  • உட்கட்சி பூசலால் பாஜ மேலிடம் அழுத்தம்; கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினாமா: பாராட்டு விழாவில் கண்ணீர் விட்டபடி அறிவித்தார்



  • உருமாறிய வைரஸ் ஆபத்தால் 2 ‘டோஸ்’ போட்டவர்களுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி அவசியம்: டிசம்பருக்குள் வந்துவிடும்; எய்ம்ஸ் தலைவர் தகவல்



  • இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே வெடிகுண்டுடன் பறந்த ‘ட்ரோனை’சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை: இரு தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை



  • வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்: அசம்பாவிதங்களை தடுக்க 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு



  • நேற்று முன்தினம் 374 பேர் இறந்த நிலையில் 24 மணி நேரத்தில் 3,998 பேர் பலி?.. ஒன்றிய அரசின் குளறுபடி தகவலால் அதிர்ச்சி



  • இந்தியாவில் முதன்முறையாக பறவை காய்ச்சலுக்கு அரியானா சிறுவன் பலி: தேசிய வைராலஜி நிறுவன ஆய்வில் தகவல்



  • நிர்வாண படங்களை எடுத்தல், வெளியிடுதல் புகாரில் ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது: மும்பை போலீசார் நள்ளிரவில் அதிரடி



  • ‘பெகாசஸ்’ ஒட்டுக் கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் 2வது நாளாக முடங்கியது: எதிர்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை



  • ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 1,000 பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பு: 2 ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]