இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமியை தொடர்ந்து கவர்னரின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு: தலைமைச் செயலாளரின் தாயாருக்கும் கொரோனா என தகவல்

7/29/2020 2:33:35 PM
74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார் நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமியை தொடர்ந்து கவர்னரின் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழக தலைமை செயலாளர் சண்முகம் தாயாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்ட வருகிறது. தினசரி சுமார் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது வரை 4 அமைச்சர்கள் உள்ளிட்ட 21 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபேன்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கிண்டி கிங் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதனைத் தொடர்ந்து கடற்கரை ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியருடன் தொடர்பில் இருந்த உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதைப்போன்று கீழ்பாக் கார்டன் தெருவில் உள்ள அவரது வீட்டில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமசுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல தலைமை செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் இருவரும் சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் தற்போது, முக்கிய விவிஐபிக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழக தலைமை செயலாளர், கடந்த சில நாட்களாக முதல்வர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வாரா? அல்லது அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • 74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்



  • சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர்



  • அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டம்; 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர்...தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் திடீர் பரபரப்பு



  • அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?..அமைச்சர்கள் கடும் அதிருப்தி: உட்கட்சி சண்டையால் தொண்டர்கள் விரக்தி



  • தாயுள்ளம் கொண்ட தலைவர் கலைஞர் சட்டமாக்கிய சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தடையின்றி உடனே நடைமுறைப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு



  • தங்கம் விலை 4வது நாளாக சரிவு; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது..கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது காரணமா?



  • கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள அதிமுக அரசை மக்கள் நம்பியிருக்காமல் சுய பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுங்கள்; மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்



  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]