இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கொரோனாவில் இருந்து தப்பிக்க ரூ47 கோடியில் தனித்தீவு: ‘எஸ்கேப்’ ஆன ஐரோப்பிய பணக்காரர்

7/16/2020 2:26:47 PM
பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு : நடிகை பயல் கோஷ் டுவிட்டால் அதிரும் பாலிவுட் கொரோனா தடுப்பு குறித்து வரும் 23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: அதிக தொற்று பாதிப்புள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்பு

டப்ளின்: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க ரூ47 கோடியில் அயர்லாந்தில் தனித்தீவு ஒன்றை ஐரோப்பிய பணக்காரர் ஒருவர் வாங்கி உள்ளார். அயர்லாந்து கடற்கரையில் உள்ள ஐரிஷ் நிலப்பரப்பின் தென்மேற்கே 157 ஏக்கரில் அமைந்துள்ள ஹார்ஸ் தீவு, நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்திய ரூபாயில் ரூ. 47 கோடி மதிப்பில் விற்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாட்டை சேர்ந்த ஒருவர், இந்த தீவை விலைக்கு வாங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலில் இருந்து தப்பிக்க, பெரும் பணக்காரர்கள் தனியார் தீவுகளை நாடிய நிலையில், தற்போது ஒருவர் கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார். பச்சை நிலப்பரப்புகளை கொண்ட இந்த தீவில், ஒரு பிரதான வீடு மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலை சுற்றியுள்ள தீவுகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத தீவாக உள்ளது.

படகு சவாரி வசதி, ஒரு ஹெலிபேட், ஒரு விளையாட்டு மைதானம், வீடு மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியன உள்ளன. மேலும், மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிகளும் ெகாண்டுள்ளன. பிரதான வீட்டில் 4,500 சதுர அடி தரை பரப்பளவு மற்றும் ஆறு படுக்கையறைகள் உள்ளன. இதுகுறித்து மாண்டேக் ரியல் எஸ்டேட்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் பாலாஷேவ் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் தொற்று பரவி  வருவதால், சில பணக்காரர்கள் தீவுகளை விலைக்கு வாங்கி தங்கிவிடுகின்றனர். அவர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத தொலைதூர இடங்களில் சொத்து அல்லது நிலத்தை வாங்குகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து சுற்றுலா தலம், ஓய்வு பயணங்களும் தடை செய்யப்பட்டதால், தனியார் தீவுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்திலிருந்து, உலகெங்கிலும் தனியார் தீவுக்கான முக்கியத்துவம் கூடியுள்ளது’ என்றார்.

மேலும் சில
  • அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொடிய விஷ ‘பார்சல்’: புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை



  • இது டிரெய்லர்தான்... மெயின் பிக்சர் இனிமேல்தான்... கொரோனாவின் 2வது அலை நிச்சயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை



  • மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல்-யுஏஇ-பஹ்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து



  • ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நாளை முதல் மக்களுக்கு விநியோகம்: உலகின் முதல் நாடாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு



  • மாஸ்கோவில் இந்திய-சீன அமைச்சர்கள் சந்திப்பு: எல்லை பதற்றத்தை குறைக்க 5 அம்ச திட்டம்: சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை



  • சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களின் விசா ரத்து: அமெரிக்கா அதிரடி



  • ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பூசி சோதனை திடீர் நிறுத்தம்: உலகளவிலான 3ம் கட்ட சோதனையில் பின்னடைவு



  • ரஷ்யா பயணத்தை முடித்துக் கொண்டு அமைச்சர் ராஜ்நாத் திடீர் ஈரான் பயணம்



  • உல்லாசத்துக்கு பஞ்சமில்லாத ரிசார்ட், நைட் கிளப், சானா பிரான்சில் நிர்வாண விரும்பிகளின் சொர்க்கபுரியில் கொரோனா தாண்டவம்



  • சட்டசபைக்கு கைக்குழந்தையுடன் வந்த உறுப்பினருக்கு பாராட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]