இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் சுறுசுறுப்பு; பாஜக கூட்டணிதான் எங்கள் பிரதான எதிரி: மாஜி அமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி

6/28/2020 2:55:28 PM
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு; விவசாயிகளின் குரல்களை அடக்கும் ஒன்றிய அரசு: டிராக்டர் ஓட்டிக்கொண்டு வந்த ராகுல் ஆவேசம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 968 எஸ்ஐகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பாட்னா: பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்து வரும் நிலையில், பாஜக கூட்டணிதான் எங்கள் பிரதான எதிரி என்று, மாஜி அமைச்சர் தலைமையில் புதிய கட்சிகள் சார்பில் கூட்டணி அமையவுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நவம்பர் மாத இறுதியில் முடிவடைகிறது. அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு பின் இந்தியாவில் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது என்பதால் தேர்தல் ஆணையம் சில சலுகைகளை கொண்டு வந்துள்ளது. இதுவரை 80 வயதுக்கு மேற்பட்டவர்களே தபால் ஓட்டு போட்டு வந்த நிலையில், தற்போது அந்த வயது வரம்பு 65 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று சந்தேகம் உள்ளவர்களும் தபால் ஓட்டு போட வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த ஆயத்தமாகி வரும் நிலையில், ஆளும் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சியை அகற்ற, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. இன்றைய நிலையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையில் மற்றொரு அணியும் களம் இறங்குவது முடிவான ஒன்று. இதற்கிடையே பீகார் தேர்தலுக்காக பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, சில உதிரி கட்சிகளை வளைத்து புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் கடந்த 15 நாட்களாக பாட்னாவில் தங்கி இருந்து ஆட்கள் திரட்டி வருகிறார்.

இதுகுறித்து யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், ‘பீகார் தேர்தலில் புதிய அணியை ஏற்படுத்திப் போட்டியிடுவோம். பாஜக கூட்டணிதான் எங்கள் பிரதான எதிரி. பாஜக-வை வீழ்த்த விரும்புவோர் எங்கள் அணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம். புதிய அணியின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்’ என்றார். யஷ்வந்த் சின்ஹா பேட்டி அளித்த போது அவருடன் மூன்று முன்னாள் எம்.பி-க்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரான அருண்குமார், தேர்தல் ஆணையத்தில் ‘பாரதிய சப்லோக்’ என்ற பெயரில் புதிய கட்சியைப் பதிவு செய்துள்ளார். அந்த பெயரில் சின்ஹா அணி, தேர்தலில் களம் இறங்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
  • நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு; விவசாயிகளின் குரல்களை அடக்கும் ஒன்றிய அரசு: டிராக்டர் ஓட்டிக்கொண்டு வந்த ராகுல் ஆவேசம்



  • உட்கட்சி பூசலால் பாஜ மேலிடம் அழுத்தம்; கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினாமா: பாராட்டு விழாவில் கண்ணீர் விட்டபடி அறிவித்தார்



  • உருமாறிய வைரஸ் ஆபத்தால் 2 ‘டோஸ்’ போட்டவர்களுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி அவசியம்: டிசம்பருக்குள் வந்துவிடும்; எய்ம்ஸ் தலைவர் தகவல்



  • இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே வெடிகுண்டுடன் பறந்த ‘ட்ரோனை’சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை: இரு தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை



  • வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்: அசம்பாவிதங்களை தடுக்க 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு



  • நேற்று முன்தினம் 374 பேர் இறந்த நிலையில் 24 மணி நேரத்தில் 3,998 பேர் பலி?.. ஒன்றிய அரசின் குளறுபடி தகவலால் அதிர்ச்சி



  • இந்தியாவில் முதன்முறையாக பறவை காய்ச்சலுக்கு அரியானா சிறுவன் பலி: தேசிய வைராலஜி நிறுவன ஆய்வில் தகவல்



  • நிர்வாண படங்களை எடுத்தல், வெளியிடுதல் புகாரில் ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது: மும்பை போலீசார் நள்ளிரவில் அதிரடி



  • ‘பெகாசஸ்’ ஒட்டுக் கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் 2வது நாளாக முடங்கியது: எதிர்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை



  • ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 1,000 பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பு: 2 ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் வெளியீடு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]