இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கொரோனாவில் இறந்தவர் உடலை 12 அடி சவக்குழிக்குள் தூக்கி வீச்சு: கலெக்டர் நோட்டீஸ்

6/7/2025 2:56:39 PM
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?

புதுச்சேரி: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் (தனியார் கம்பெனி மேலாளர்), ஊரடங்கு காரணமாக புதுச்சேரி வில்லியனூர் கோபாலன்கடையில் உள்ள மாமியார் வீட்டுக்கு மனைவியை பார்க்க வந்திருந்தார். அங்கு நெஞ்சுவலியால் இறந்தார். அவரது உடலை பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன்பின்னர் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டதும் அந்த நபரின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் கோபாலன்கடை சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் முன்னிலையில் ஏற்கனவே தயாராக தோண்டி வைக்கப்பட்டு இருந்த 12 அடி குழியில் அடக்கம் செய்யப்பட்டது. புதுச்சேரியில் இறந்த சென்னை கொரோனா நோயாளியின் சடலத்தை கோபாலன்கடை சுடுகாட்டில் சவக்குழியில் அலட்சியமாக வீசி தள்ளி விட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாகியது.

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘’உடல் அடக்கம் செய்தபோது ஊழியர் ஒருவரது கை நழுவியதால் உடல் உருண்டு பள்ளத்தில் விழுந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்வது இதுவே முதன்முறை என்பதால், ஊழியர்கள் அச்சம் காரணமாக இது நடந்திருக்கலாம். இனி இதுபோல் சம்பவம் நடக்காமல் இருக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார். கொரோனா பாதித்து உயிரிழந்த நபர்களை எப்படி அடக்கம் செய்ய வேண்டுமென விதிமுறைகள் அடங்கிய நிலையாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. எனவே, சென்னை நபரின் சடலத்தை குழிக்குள் தள்ளிவிட்டது தொடர்பாக வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் அருண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் சில
  • தங்கம் விலை மீண்டும் கிடு கிடு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ608 அதிகரிப்பு



  • கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு



  • நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை: மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகலில் ஆலோசனை



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



  • வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்; காஞ்சிபுரம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரையில் பிரம்மாண்ட வரவேற்பு



  • அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை; இபிஎஸ்- ஓபிஎஸ் நாளை பலப்பரீட்சை: 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]