இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்; அதிர்ச்சியளிக்கும் ரயில்வே அறிக்கை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

6/1/2025 3:54:54 PM
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: வீரியம் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கை தளர்த்தியது ஏன்? வெள்ளை மாளிகையை சுற்றி வன்முறை போராட்டம்; பதுங்கு குழியில் அதிபர் டிரம்ப் தஞ்சம்: அமெரிக்காவில் 25 நகரங்களில் ஊரடங்கு அமல்

புதுடெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விசயத்தில், ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மே 1ம் தேதியில் இருந்து பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நாற்பது சதவீத ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும், பல ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டதாகவும், ரயில் பயணிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதுதொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வந்துள்ளன. இதற்கிடையே ரயில்வே போலீசாரின் தரவுகளின்படி, ரயில் பயணத்தின் போது 80 தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதனை தொடர்ந்து, ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கர்ப்பிணிகள், நோயாளிகள், உடல் பலவீனமானவர்கள் சிறப்பு ரயில்களில் செல்ல வேண்டாம். அவசியம் கருதினால் மட்டுமே பயணிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட் செய்துள்ளார்.

அதில், ‘பலவீனமானவர்கள் ரயிலில் பயணம் செய்யக்கூடாது என்ற ரயில்வே அமைச்சகத்தின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பம் முதலே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இந்த நேரத்தில், அவர்களை ரயில்வே அமைச்சகம் முன்னுரிமை கொடுத்து கையாண்டிருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • சட்டீஸ்கர் - ஒடிசா மாநில எல்லையில் ஆயுத தொழிற்சாலை அழிப்பு: 2 மாவோயிஸ்ட் அதிரடி கைது



  • மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜூன் 14ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: கொரோனா ஊரடங்குக்கு பின் நடக்கிறது



  • பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் 68 நாட்களில் 94 உத்தரவுகள்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு



  • அமெரிக்க அதிபர் இந்தியாவில் 2 நாள் முகாம்; டிரம்பால் கொரோனா அதிகரிப்பு: சிவசேனா எம்பி ராவத் குற்றச்சாட்டு



  • பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு; கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா : முதல்வர் பினராயி விஜயன் தகவல்



  • தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு வராததால் பீகாரில் 25,000 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: மாநில கல்வித்துறை அதிரடி நடவடிக்கை



  • 189 நாடுகளை சேர்ந்த 100 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்; 3 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு



  • நாளை நாடு முழுவதும் ஒருநாள் ஊரடங்கு: 3,700 ரயில்கள், 1,000 விமானங்கள் ரத்து



  • கேரளாவில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா: காசர்கோடு மாவட்டத்துக்கு ‘சீல்’



  • 186 நாடுகளை சூறையாடி வரும் கொடூர கொரோனா வைரஸ்: 4 நாளில் 1 லட்சம் பேர் பாதிப்பு; 4,883 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]