இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வரலாற்றில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடல்

3/22/2020 2:39:43 PM
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு; கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா : முதல்வர் பினராயி விஜயன் தகவல் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு வராததால் பீகாரில் 25,000 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: மாநில கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

நாகை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 463 ஆண்டுகால வரலாற்றில் நாகூர் தர்கா நேற்று முன்தினம் இரவு முதல் மூடப்பட்டது.
கொரனோ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் பக்தர்களின் வருகையை தற்காலிகமாக நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக கோயில்கள், மசூதிகள், பேராலயங்கள், சந்தைகள் ஆகியவை மூடப்பட்டு வருகிறது. இதன்படி நாகூரில் உள்ள உலக புகழ் பெற்ற தர்கா நேற்று முன்தினம் இரவு தொழுகைக்கு பின்னர் பக்தர்களின் வருகைக்கு தடை விதித்து தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி அரசின் மறு அறிவிப்பு வரும் வரை நாகூர் தர்காவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். பொதுமக்கள் அனைவரும் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, நாகூர் தர்காவின் பிரதான வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து தர்காவில் தங்கியிருந்த அனைத்து பக்தர்களும் நேற்று முன்தினம் இரவு தொழுகைக்கு பின்னர் படிப்படியாக வெளியேற்றப்பட்டனர். அரசின் மறு உத்தரவு வரும் வரை தர்கா மூடப்பட்டாலும் தர்கா திறக்கும் நேரமான காலை மற்றும் தர்கா மூடும் நேரமான இரவு ஆகிய நேரங்களில் 1 மணி நேரம் மட்டும் பாரம்பரிய முறைப்படி தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டவர் தர்காவின் 463 ஆண்டுகால வரலாற்றில் பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று தெரிவித்தனர்.

மேலும் சில
  • நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு; பஸ், ரயில்கள் ஓடவில்லை: வழிபாட்டு தலங்கள் மூடல்



  • கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பேரவை கூட்டம் 31ம் தேதியுடன் முடிவு



  • கொரோனாவுக்கு எதிராக நாளை மக்கள் ஊரடங்கு: ரயில், பஸ், லாரிகள் ஓடாது



  • கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி: இதுவரை 28 பேருக்கு சிகிச்சை



  • கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டினாலும் சென்னையில் வாகன நெரிசல் குறையவில்லை: மைதானங்களை மூடியதால் சாலைகளில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள்



  • திருச்சி, தென் மாவட்டங்களில் பரவுகிறது கொரோனா: 73 பேருக்கு பரிசோதனை



  • நீதிபதி வீட்டில் மயங்கி விழுந்தார்: லஞ்சம் வாங்கி கைதான பெண் பிடிஓ திடீர் சாவு



  • கொரோனா பரவுவதை தடுக்க ஆன்லைன் மூலமாக மின் கட்டணம்: மின்வாரியம் அறிவுறுத்தல்



  • 5 கோட்டங்களில் இ-ஆபீஸ்: தெற்கு ரயில்வே நடவடிக்கை



  • பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறை: பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ கோரிக்கைக்கு அமைச்சர் உறுதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]