இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு வராததால் பீகாரில் 25,000 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: மாநில கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

3/22/2020 2:37:04 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

பாட்னா: பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு வராததால் பீகாரில் 25,000 ஆசிரியர்களை அம்மாநில கல்வித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பிப்ரவரி பிற்பகுதியிலிருந்து 75,000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் மதிய உணவு திட்டத்தை நிறுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டது. இதற்கிடையே, ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 17ம் தேதி முதல் 4.5 லட்சம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி  ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிப். 25ம் தேதி முதல்  50,000க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களும், அவர்களுடன் சேர்ந்து வேலை நிறுத்த போராட்டம் ெசய்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 5 லட்சம் ஆசிரியர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர். ஊதிய முரண்பாடு சரிசெய்தல் மற்றும் ஏழாவது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். முன்னதாக, பீகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு வாரியத் தேர்வு நடந்தது.
ஆனால், அந்த தேர்வுத் விடைத்தாள்களின் மதிப்பீட்டில்  ஆசிரியர்கள் ஈடுபடவில்லை. அதனால், தேர்வுத் தாள்கள் மதிப்பீட்டில் பங்கேற்காத 25,000க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்  அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது அரசுப்பணியை செய்ய மறுத்த குற்றத்திற்காக போலீசார் வழக்கு பதிவும் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், பீகார் மாநில கல்வித்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பீகார் மாநில மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சத்ருகன் பிரசாத் சிங் கூறுகையில், ‘நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் வரை ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும். இதில், எந்த சந்தேகமும் இல்லை. ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறி மக்களை அரசு தவறாக வழிநடத்தி வருகிறது. உண்மையில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை’ என்றார். இதுகுறித்து மாநில கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பத்தாம் வகுப்பு வாரியத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களின் மதிப்பீட்டில்  ஆசிரியர்கள் ஈடுபடவில்லை. மதிப்பீட்டில் பங்கேற்க வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தும், அவர்கள் அந்த உத்தரவை பின்பற்றாததால், பள்ளி ஆசிரியர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர்கள் முன்பு பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும் போதே, தேர்வு மேற்பார்வை கடமையில் இருந்து விலகி இருந்தனர்’ என்றனர்.

மேலும் சில
  • கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம்



  • மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?



  • உலகளவில் அமெரிக்காவை முந்தியதால் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்; ஒரே நாளில் 64,399 பேருக்கு நோய்தொற்று



  • கேரளாவில் நேற்றிரவு விமான விபத்து; பைலட், உதவி பைலட் உட்பட 19 பேர் பலி; 10 பேர் கவலைக்கிடம்



  • மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு; மண்ணில் புதைந்த 54 தமிழர்கள் கதி என்ன?..தேடும் பணி தீவிரம்; மீட்பு படை விரைவு



  • மூணாறு அருகே இன்று அதிகாலை நிலச்சரிவு; 80 தமிழக தொழிலாளர் கதி என்ன?....4 உடல்கள் கண்டெடுப்பு



  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]