இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பேரவை கூட்டம் 31ம் தேதியுடன் முடிவு

3/21/2020 2:33:58 PM
காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் 31ம் தேதியுடன் முடியும் என்று சபாநாயகர் தனபால்  அறிவித்தார். கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை முன் கூட்டியே முடிக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கை பிரதமர் அறிவித்துள்ளார். இப்படி கூறிக் கொண்டு சட்டப்பேரவை கூட்டம் மட்டும் நடத்துவது சரியாக இருக்காது. பேரவை கூட்டத்தை ஒத்தி வைக்கப்பட வேண்டும். எம்எல்ஏக்கள் தொகுதி பக்கம் சென்று, கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட இது வசதியாக இருக்கும்” என்றார்.

இந்நிலையில், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் மற்றும் மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி, திமுக கொறடா சக்கரபாணி, துணை கொறடா பிச்சாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நேற்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று மாலை 3.40 மணிக்கு கூட்டம் முடியும் வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இன்று பிற்பகல் 12 மணிக்கு சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர், எதிர்கட்சி துணை தலைவர், காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் எடுக்கப்பட்ட முடிவை சபாநாயகர்  தனபால் பேரவையில் அறிவித்தார்.

இதன்படி தமிழக சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 31ம் தேதியுடன் முடிக்கப்படும் என்று சபாநாயகர்  தனபால் அறிவித்துள்ளார். ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிய வேண்டிய பேரவைக் கூட்டம் 9 நாட்கள் முன்னதாக மார்ச் 31ம் தேதியுடன் முடிக்கப்படுகிறது. இதன்படி காலை, மாலை என்று இரண்டு பிரிவாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். பேரவை நிகழ்ச்சிகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு தொடங்கி பேரவையின் அன்றைய நாள் நிகழ்ச்சிகள் முடிவு பெறும். காலையில் ஒரு துறை மீதான மானிய கோரிக்கை மீதும், மாலையில் மற்றொரு துறை மீதான மானிய கோரிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு



  • காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும்



  • நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு



  • திருக்குவளையில் நாளை கருணாநிதி சிலை திறப்பு: மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்



  • லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் வேலைநிறுத்த போராட்டம்: மாநில தலைவர் பேட்டி



  • துறைமுக கிடங்கில் 740 டன் வெடிமருந்து: 5 ஆண்டுகளாக இருப்பு: சென்னைக்கு பேராபத்து: பொதுமக்கள் பீதி



  • ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து



  • பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ500 அபராதம்: சுகாதார துறை அதிரடி



  • கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாளை, நாளை மறுதினம் மதுரை, திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி நேரில் ஆய்வு: இன்று மதியம் புறப்பட்டு சென்றார்



  • தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]