இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

186 நாடுகளை சூறையாடி வரும் கொடூர கொரோனா வைரஸ்: 4 நாளில் 1 லட்சம் பேர் பாதிப்பு; 4,883 பேர் பலி

3/21/2020 2:29:08 PM
காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

புதுடெல்லி: 186 நாடுகளை சூறையாடி வரும் கொடூர கொரோனா வைரசால், கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 4,883 பேர் பலியாகியும் உள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைய நிலையில் 186 நாடுகளில் வேகமாக பரவி மக்களை கொல்லும் பெரும் கொள்ளை நோயாக மாறியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக, இத்தாலியில் வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் தவிர்த்து பிற பொருட்களுக்கு இத்தாலி அரசு வர்த்தகத் தடை விதித்துள்ளது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நர்ஸ் ஒருவர் வெளியிட்ட தகவல், அங்குள்ள கொடூரமான சூழலை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. இத்தாலியில் கொரோனா பாதித்த நோயாளிகளை வெறும் எண்களாக மட்டுமே கருதுவதாகவும், மருத்துவமனைகளில் புதிதாக நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்ததும், அடுத்த சில நிமிடங்களில் அவரது படுக்கையை இன்னொருவருக்கு வழங்கப்படுகிறது. 30 நிமிடங்களுக்கு ஒருமுறை சடலங்கள் புதைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சடலங்களை புதைப்பதற்காக சுடுகாடுகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

ஒரே சோக காடாக மாறிய இத்தாலியில், தற்போது கொரோனா பாதிப்பின் இறப்பு எண்ணிக்கையில் சீனாவை விஞ்சியுள்ளது. மருத்துவமனைகளில் தற்போது நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை என்பது மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் எந்த நோயாளிகளிடமும் அக்கறையுடன் எவரும் சிகிச்சை அளிப்பது குறைந்துள்ளதாக இத்தாலிய நர்ஸ் தெரிவித்தார். இத்தாலியில் மட்டும் கடந்த 16ம் தேதி கணக்கெடுப்பின்படி, பலி எண்ணிக்கை 1,809 ஆக இருந்த நிலையில், இன்று 4,032 ஆக 4 நாட்களில் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். சர்வதேச அளவில் பார்க்கும்போது 16ம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,69,415 ஆக இருந்த நிலையில், இன்று 2,72,871 ஆக உயர்ந்துள்ளது. கிடத்திட்ட 1,06,456 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையில் 16ம் தேதி 6,515 ஆக இருந்த நிலையில் இன்றைய நிைலயில் 11,398 ஆக உயர்ந்து 4 நாளில் 4,883 பேர் கூடுதலாக பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் பலி எண்ணிக்கை ஒரே நாளில் 1,367 பேர் ஆக இருந்தது. அதில் சீனாவில் 7, இத்தாலியில் 627, ஸ்பெயினில் 262, ஈரானில் 149 என்ற நிலையில் உள்ளன. இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனா வை‌ரசால் பாதிக்‌கப்பட்டு, கர்நாடகா,‌ டெல்லி, மகாராஷ்டிரா, ‌பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலத்தில் தலா ஒருவர் பலியாகினர். இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

நேற்று வரை 14,514 நபர்களிடமிருந்து மொத்தம் 15,404 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த 17 பேர், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மூன்று பேர், இங்கிலாந்தைச் சேர்ந்த இருவர், தலா ஒருவர் கனடா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். நாடு முழுவதும் சிகிச்சை பெற்றுவந்த 23 பேர் குணமடைந்து வீடு‌ திரும்பிவிட்டதாகவும், நேற்று மட்டும் புதியதாக 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. மருத்து‌வர்களாக இருக்கும் 3‌8 ‌எம்பிக்களுடன் ஆலோசனை‌ நடத்திய நாடாளு‌மன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தங்கள் தொகுதிகளில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் சில
  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]