இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை திருப்பதி, தி.மலை கோயில்களில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைப்பு

3/20/2020 2:11:35 PM
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல் மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் திருமலையிலும் தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அலிபிரி மலைப்பாதை, பாதயாத்திரையாக வரக்கூடிய மலைப்பாதை ஆகிய இரண்டும் மூடப்பட்டுள்ளது. திருமலையில் இன்று (நேற்று) நேரம் ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்களை சுவாமி தரிசனம் செய்துவைத்துவிட்டு அத்துடன் ஒருவாரத்திற்கு தரிசனம் நிறுத்தப்படுகிறது. இதேபோல் அன்னதான கூடம், முடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா உள்ளிட்ட அனைத்து இடங்களும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோயிலை கடந்த 1892ம் ஆண்டு 2 நாட்கள் மட்டும் அப்போதைய கோயில் நிர்வாகத்தினர் மூடியுள்ளனர். அதன்பிறகு தற்போது முதல்முறையாக கோயில் மூடப்படாமல் வழக்கம்போல் சுவாமிக்கு நடைபெறக்கூடிய அனைத்து பூஜைகளையும் அர்ச்சகர்கள் மேற்கொள்ள உள்ளனர். பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது மட்டும் தற்காலிகமாக முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது. ஆனால் ஏழுமலையானுக்கு தினந்தோறும் நடத்தப்படும் 6 கால பூஜைகள் மட்டும் வழக்கம்போல் நடத்தப்படும். ஒரு வாரத்திற்கு பிறகு வைரஸ் பரவுவது எந்த நிலையில் உள்ளதோ அதனை பொறுத்து மேற்கொண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அல்லது நீடிப்பதா என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் வழங்கும் அறிவுரையின்படி செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அறிவிப்பு காரணமாக அலிபிரி மலையடிவாரத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தரிசனம் முடித்த பக்தர்கள் இன்று காலை முதல் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதேபோல் இன்று அதிகாலை ஏற்கனவே சிறப்பு தரிசன சேவைகளுக்கு பதிவு செய்து காத்திருந்த பக்தர்களை தேவஸ்தானம் அனுமதித்தது. அவர்கள் தரிசனம் முடிந்ததும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். நாளை முதல் பதிவு செய்திருந்தாலும் யாருக்கும் அனுமதி இல்லை. இதனால் இன்று காலை முதல் திருமலை முழுவதும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.இதேபோல் திருச்சானூர் பத்மாவதி தாயார், கோவிந்தராஜ சுவாமி, கோதண்டராம சுவாமி ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய இன்று முதல் வரும் 31ம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அரசு மருத்துவ ஆலோசனைப்படி உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆறு கால பூஜைகள் வழக்கம் போல் சிவாச்சாரியார்கள் பின்பற்றுவார்கள் என்று கோயில் இணை ஆணையாளர் ஞானசேகர் தெரிவித்தார். அதன்படி இன்று காலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோயில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் முழுவதும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் சில
  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



  • ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு



  • இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 779 பேர் பலி: பாதிப்பு 16 லட்சத்தை தாண்டியது



  • பெண் சகவாசத்தால் ஏற்பட்ட நம்பிக்கை துரோகம்: சப்பாத்தியில் விஷம் வைத்து நீதிபதி, மகன் கொலை: மந்திரவாதி உட்பட 6 பேர் கும்பல் கைது



  • கேரள தங்க கடத்தல் வழக்கு தமிழகத்தில் விசாரிக்க என்ஐஏ திட்டம்: நள்ளிரவில் சொப்னா வீட்டில் சிவசங்கர் ‘ரிலாக்ஸ்’



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]