இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருச்சி, தென் மாவட்டங்களில் பரவுகிறது கொரோனா: 73 பேருக்கு பரிசோதனை

3/19/2020 3:49:00 PM
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்; அதிர்ச்சியளிக்கும் ரயில்வே அறிக்கை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: வீரியம் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கை தளர்த்தியது ஏன்?

சென்னை: திருச்சி, தென் மாவட்டங்களில் 73 பேர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். திருச்சியில் மட்டும் 36 பேர் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கி உலகளவில் 8,000 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் 3 பேர் இறந்துள்ளனர். 276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த மக்கள் அதிகளவில் வெளியிடங்களில் கூட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தியேட்டர், வணிக நிறுவனங்கள், சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று இரவு சார்ஜாவில் இருந்தும், சிங்கப்பூரில் இருந்தும் அடுத்தடுத்து விமானங்கள் வந்தன. சார்ஜாவில் இருந்து 150 பயணிகள், சிங்கப்பூரில் இருந்து 174 பயணிகள் வந்தனர். அனைவரையும் மருத்துவ குழுவினர் தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் பரிசோதனை செய்தனர். இதில் 27 பேருக்கு அதிக உடல் சூடு, சளி இருந்தது. இந்த 27 பேரில் 9 பேர் பெண்கள்.

இதையடுத்து 27 பேரும் தனி பஸ்சில் ராம்ஜிநகர் அடுத்த கள்ளிக்குடியில் மார்க்கெட்டுக்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 27 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் கொரோனா அறிகுறியுடன், சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடியில் நரிக்குறவர் காலனி உள்ளது. இந்த காலனிக்கு கேரளாவில் இருந்து நரிக்குறவர்கள் 28 பேர் கடந்த 16ம் தேதி ரயில் மூலம் வந்துள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த இவர்கள், வியாபாரத்துக்காக கேரளா சென்றிருந்தனர். இந்தியாவிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் தான் அதிகளவில் கொரோனா வைரசின் தாக்கம் உள்ளது. இதன்காரணமாக கேரளாவில் இருந்து நரிக்குறவர்கள் வந்துள்ள தகவல் அறிந்ததும், திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவவர் சுகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் சென்று அவர்களை பரிசோதனை செய்தனர். 14 நாட்களுக்கு வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். 28 பேரில் யாருக்காவது காய்ச்சல், சளி இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அரசு தலைமை மருத்துவமனையில் 9 பேர், கள்ளிக்குடி சிறப்பு மையத்தில் 27 பேர் என மொத்தம் 36 பேர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென் மாவட்டங்கள் மதுரை, கீழக்கரை, காரைக்குடி மற்றும் மூணாறு பகுதிகளை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய‌ கீழக்கரையை சேர்ந்த 3 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு, கொரோனா பாதிப்பில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று துபாயிலிருந்து கீழக்கரை திரும்பிய 35 வயதை சேர்ந்த ஒருவர் உடல் நலமின்றி காணப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த 24 வயதான வாலிபர், நேற்று மாலை துபாயிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் நடந்த பரிசோதனையில் அவருக்கு, கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறி இருந்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு முகக்கவசம் மற்றும் தனி உடை அணிவித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினர் அனுப்பி வைத்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை திருப்பத்தூரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்துள்ளார். சவுதியில் இருந்து சமீபத்தில் ஊர் திரும்பி உள்ளதாகவும், இருமல், வயிற்று வலி உள்ளதாக கூறி சிகிச்சை அளிக்க கூறியுள்ளார். அவர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார் என்பதால் தனியார் மருத்துவமனை பணியாளர்கள் அவரை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது ரத்தமாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் கொரோனா அறிகுறிகளுடன் சிலர் சிகிச்சையில் உள்ளனர். மூணாறில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர், தங்கியிருந்த டீ கவுண்டி சுற்றுலா விடுதியில், 6 ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டது. 6 பேரையும் உடனடியாக மூணாறு அருகில் உள்ள சித்ராபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதித்தனர்.

மேலும் சில
  • சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் இன்று பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: கட்டண அதிகரிப்பால் அதிருப்தி



  • 68 நாட்கள் ஊரடங்குக்கு பிறகு தமிழகத்தில் பஸ், ரயில்கள் ஓடின: சென்னையில் இன்று ஆட்டோ, டாக்சிகள் இயக்கம்



  • வரலாற்றில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடல்



  • நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு; பஸ், ரயில்கள் ஓடவில்லை: வழிபாட்டு தலங்கள் மூடல்



  • கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பேரவை கூட்டம் 31ம் தேதியுடன் முடிவு



  • கொரோனாவுக்கு எதிராக நாளை மக்கள் ஊரடங்கு: ரயில், பஸ், லாரிகள் ஓடாது



  • கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி: இதுவரை 28 பேருக்கு சிகிச்சை



  • கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டினாலும் சென்னையில் வாகன நெரிசல் குறையவில்லை: மைதானங்களை மூடியதால் சாலைகளில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள்



  • நீதிபதி வீட்டில் மயங்கி விழுந்தார்: லஞ்சம் வாங்கி கைதான பெண் பிடிஓ திடீர் சாவு



  • கொரோனா பரவுவதை தடுக்க ஆன்லைன் மூலமாக மின் கட்டணம்: மின்வாரியம் அறிவுறுத்தல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]