குடிபோதை கண்ணை மறைத்தது 15 வயது மகளிடம் அத்துமீறல்: கொடூர தந்தை கைது
3/19/2020 3:05:18 PM
ஆவடி: ஆவடியில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆவடி காமராஜர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (41). இவர் பெயின்டர். இவரது மனைவி தனியார் ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர்களது 15 வயது மகள், ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 மாதங்களாக வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் வெங்கடேசன். நேற்று குடிபோதையில் வந்த வெங்கடேசன், மகளிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, தாயிடம் சொல்லி அழுதுள்ளார்.
இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் கொடுத்த புகாரின்படி, இன்ஸ்பெக்டர் ஷோபாராணி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி மற்றும் அவரது தந்தை வெங்கடேசனிடம் விசாரித்தனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து போக்சோ தடுப்பு சட்டத்தின்கீழ் வெங்கடேசனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.