இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்ட செயல்பாடு தமிழகம் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது: 2017ஐ விட 6 இடங்கள் பின்தங்கியது

2/27/2020 3:25:24 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

சென்னை: பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தை செயல்படுத்துவதில் 2017-18ம் ஆண்டை விட 6 இடங்கள் பின்தங்கி 2018-19ம் ஆண்டில் தமிழகம் 8வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளின் கீழ் 79 ஆயிரத்து 395 குக்கிராமங்கள் உள்ளது. இவற்றை எல்லாம் இணைக்கும் வகையில் மொத்தம் 1.49 லட்சம் கி.மீ நீளமுள்ள கிராம சாலைகள் உள்ளன. இதன்படி 97 ஆயிரத்து 200 கி.மீ நீள தார் சாலைகளும், 3 ஆயிரத்து 104 கி.மீ சிமென்ட் சாலைகளும், 2020 கி.மீ நீள ஈரடுக்கு கப்பி சாலைகளும், 8 ஆயிரத்து 939 நீளமுள்ள ஓரடுக்கு கப்பி சாலைகளும், 5 ஆயிரத்து 573 கி.மீ நீள சரளைக்கல் சாலைகளும், 33 ஆயிரத்து 077 கி.மீ நீள மண் சாலைகளும் உள்ளது.

இந்த சாலைகள் தமிழ்நாடு சாலை ஊரக சாலைகள் திட்டம், நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம், ஊரக உட்கட்டமைப்பு திட்டம், ஊரக சாலைகள் பராமரிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து கிராம சாலைகளை மேம்படுத்த மத்திய அரசும் நிதி வழங்கி வருகிறது. இதன்படி பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின்படி கிராம சாலைகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின்படி தமிழகத்தில் 2015- 16ம் ஆண்டு 588.974 கி.மீ நீளமும், 2016-17ம் ஆண்டில் 883.189 கி.மீ நீளமும், 2017-18ம் ஆண்டில் 1,611.36 கி.மீ நீளமும், 2018-19ம் ஆண்டில் 2166.856 கி.மீ நீளமும், 2019-20ம் ஆண்டில் 746.606 கி.மீ நீள சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2015-16ம் ஆண்டில் 205 கோடி, 2016-17ம் ஆண்டில் 309 கோடி, 2017-18ம் ஆண்டில் 591 கோடி, 2018-19ம் ஆண்டில் 589 கோடி, 2019-20ம் ஆண்டில் 268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி சாலை பணிகளை சிறப்பாக மேற்கொண்ட மாநிலங்களின் தரவரிசை பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 2016-17ம் ஆண்டில் 4வது இடத்தில் இருந்த தமிழகம் 2017-18ம் ஆண்டில் 2 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்தது. இந்நிலையில் 2018-19ம் ஆண்டில் 6 இடங்கள் பின்தங்கி 8வது இடத்தை பிடித்துள்ளது

மேலும் சில
  • ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா?



  • காஞ்சிபுரம் சரவண பவன் உணவக மேலாளர் தற்கொலை: சம்பள பிரச்னையா? விசாரணை



  • காசோலை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராக சம்மன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு



  • ஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது



  • பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுன் தப்பியது: ஜன்னல் கம்பியை வளைத்து புகுந்தனர்



  • சத்தியமங்கலம் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு



  • மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் பாதை: விரைவில் பணிகள் தொடக்கம்



  • சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்



  • திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தல்



  • ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்துக்கு கமல்-ஷங்கர் பொறுப்பேற்க வேண்டும்: ஹீரோ எழுதிய கடிதத்துக்கு பட நிறுவனம் பதில்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]