இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

கோபே பிரையன்ட், மகள் கியானா நினைவு நாள் அனுசரிப்பு: அவளது புன்னகை சூரிய ஒளியைபோல் இருந்தது...20 நிமிட உரையில் வனேஷா பிரையன்ட் உருக்கம்

2/25/2020 3:50:34 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

லாஸ் ஏஞ்சல்ஸ்:  அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் கோபே பிரையன்ட் (41), அவரது மகளான கியானாவுக்கு (13) கூடைப்பந்து பயிற்சி அளிக்க கடந்த ஜன. 26ல் தனியார் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். பயிற்சியாளர்கள் உள்பட 7 பேர் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். காடுகள் நிறைந்த கலாபசாஸ் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிக் கொண்டது. இச்சம்பவத்தில் கோபே பிரையன்ட், அவரது மகள் கியானா உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் கூடைப்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் கூடைப்பந்து வீரர் ஜோ பிரையன்ட்டின் மகனான கோபே பிரையன்ட் மனைவி வனேஷா தம்பதியருக்கு நடாலியா (17), கியானா, பியான்கா (3), காப்ரி (7 மாதம்) ஆகிய 4 பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த கணவர் மற்றும் மகளின் வாழ்க்கையை கவுரவிக்கும் விதமான கூட்டம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் நடந்தது. அப்போது கூட்டத்தின் முன் கிட்டத்தட்ட 20 நிமிடம் பிரையன்ட் மனைவி வனேஷா உருக்கத்துடன் பேசியதாவது:

உலகெங்கிலும் இருந்து எனது குடும்பத்திற்காக அன்பையும், ஆதரவையும், பிரார்த்தனைகளையும் செய்த உள்ளங்களுக்கு மிக்க நன்றி. என் மகள் கியானா ஒரு அற்புதமான இனிமையான, மென்மையான ஆன்மா. அவள் எப்போதும் சிந்தனையுடன் இருப்பாள். அவளுடைய காலை மற்றும் மாலை முத்தங்கள் எனக்குள் எத்தனை அன்பை பொழிந்தன. ஒவ்வொரு நாளும் அவள் என்னை முத்தமிட்டதை நினைவு கொள்கிறேன். அவள் அப்பாவின் பெண்; ஆனால் அவள் அம்மாவை நேசிக்கிறாள் என்று எனக்குத் தெரியும். அவர் என் மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவராக இருந்தார். கடந்த ஆகஸ்டில், அவர் தனது அப்பாவுக்கு ஒரு அழகான பிறந்தநாள் கேக் தயாரித்தார். தனது அப்பாவைப் போலவே சிறந்த போட்டியாளராக வர ஆசைபட்டார். அவளது புன்னகை சூரிய ஒளியை போல் இருந்தது. என் கணவர் கோபே பிரையன்ட் எப்போதும் என்னிடம் ‘அவள் நானே’ என்று சொல்லுவார். கோபேயும் கியானாவும் இயல்பாகவே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டனர். கோபே பிரையன்ட் ஒரு நல்ல மனிதர்; ஒரு சிறந்த விளையாட்டு வீரர்; ஒரு ஆசிரியர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் நிறுவனமான ஐலண்ட் எக்ஸ்பிரஸ் பைலட் அரா ஜார்ஜ் சோபயானின் கவனக்குறைவான பணியால் விபத்து நடந்துள்ளது. அனைத்து சம்பவங்களுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனமே பொறுப்பு. அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் சில
  • வார்னர், பின்ச் அதிரடியில் ஆஸ்திரேலியா வெற்றி: டி20 தொடரை கைப்பற்றியது



  • அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக 10 விக்கெட்டையும் சாய்த்த காஷ்வீ: சண்டிகர் வீராங்கனைக்கு குவியும் பாராட்டு



  • இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கொடுத்த ‘டார்ச்சர்’ அதிகம்: மனதை திறந்த இன்சமாம்-உல்-ஹக்கிம்



  • துப்பாக்கி சுடுதல், வில்வித்தைக்கு அனுமதி: சண்டிகரில் 2022ல் காமன்வெல்த்...இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய ரைபிள் சங்கம் வரவேற்பு



  • கால்பந்து வரலாற்றில் புதிய உலக சாதனை: 1,000 கோல் கண்ட அபூர்வ சூறாவளி....பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி அபாரம்



  • வேண்டுமென்றே ஆட்டம் தாமதம்: வெஸ்ட் இண்டீசுக்கு அபராதம்....ஐசிசி நிர்வாகம் அதிரடி



  • 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து: டெஸ்ட் சாம்பியன் இந்தியாவுக்கு முதல் தோல்வி.....பிப். 29ம் தேதி க்ரை சர்ச்சில் 2வது போட்டி



  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 5வது பதக்கம்



  • நாளை நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் சாதிக்குமா கோஹ்லி தலைமையிலான அணி?



  • நாளை மறுநாள் முதல் டெஸ்ட் தொடக்கம் கோஹ்லிதான் எனது முதல் இலக்கு: களத்துக்கு வரும் நியூசி. பவுலர் பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]