இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வாட்ஸ் அப், வீடியோ காலில் அருவியாக கொட்டி ஆபாச பேச்சு; கள்ளக்காதலி உட்பட 40 பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த திருச்சி வங்கி ஊழியர்

2/19/2020 3:56:34 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

தஞ்சை,: மணப்பாறையை சேர்ந்த வங்கி ஊழியர் 40 பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்த வீடியோவை அவரது மனைவி கோர்ட்டில் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36). புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த பட்டதாரி பெண் தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த டிசம்பர் 2ம் தேதி திருமணம் நடந்தது. முதலிரவில் மனைவியை பிரிந்து தனி அறையில் எட்வின் ஜெயக்குமார் செல்போனில் விடிய விடிய பேசிக்கொண்டிருந்தார். இவ்வாறு தினம்தோறும் அவரது தனி அறையில் பல பெண்களிடம் செல்போனில் ஆபாசமாக பேசி வந்ததும், தன்னுடன் நெருங்காமல் தவிர்த்து வந்ததும் கணவர் மீது தாட்சருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கணவர் வங்கிக்கு வேலைக்கு சென்ற நிலையில், அவரது அறையை தாட்சர் சோதனையிட்டார். அப்போது அந்த அறையில் 15 செல்போன்கள் இருந்தது. அந்த செல்போன்களில் கணவர் மற்றும் பல பெண்கள் நிர்வாண நிலையில் உள்ள படங்கள், பல பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வங்கி வாடிக்கையாளர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் இருந்தது. மேலும் செல்போன்களின் வாட்ஸ் அப்பில் பல பெண்களிடம் உல்லாசத்தில் ஈடுபட வற்புறுத்தும் குறுஞ்செய்திகள் மற்றும் எட்வின் ஜெயக்குமார் பாத்ரூமில் நிர்வாணமாக நின்றபடி பல பெண்களுடன் வீடியோ கால் பேசி அதை செல்போனில் பதிவு செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தனது மாமியார், கணவரின் தங்கை, அவர்களது உறவுக்கார பெண் ஆகியோரிடம் தனது கணவர் பற்றி தாட்சர் கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. தனது அந்தரங்கங்கள் தெரிந்து விட்டதை தனது தாய் மூலம் அறிந்து கொண்ட எட்வின் ஜெயக்குமார், வீட்டுக்கு வந்து மனைவியை திட்டினார். இந்நிலையில் அதே வங்கியில் பணியாற்றும் தேவி பிலோமினா தனது கணவரின் கள்ளக்காதலி என்பதையும் அறிந்து கொண்டு தாட்சர் கேட்டபோது, கணவர் சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் நீ குளிக்கும்போது ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளேன். இதே வீடியோ தனது கள்ளக்காதலியிடம் உள்ளது. எங்களை பற்றி வெளியே சொன்னால் அந்த வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து தாட்சர் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் வந்து ஜெயக்குமாருடன் பேசியுள்ளனர்.

தனது அந்தரங்கத்தை மனைவி வெளியே சொல்லி விட்டதால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், மனைவியை 2 முறை வெளியே ஆலயத்துக்கு அழைத்து சென்று கொலை செய்ய முயற்சித்துள்ளார். இக்கொலை முயற்சியில் இருந்து தப்பிய தாட்சர், வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். ஆனால் அப்பெண்ணின் புகாரை எஸ்ஐ சாந்தி மற்றும் போலீசார் வாங்க மறுத்துள்ளனர். இதனால் தஞ்சை சரக டிஐஜி லோகநாதனிடம் புகார் செய்தார். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் எட்வின் ஜெயக்குமார், அவரது தாய் லில்லி ஹைடா, சகோதரி கேத்தரின் நிர்மலாமேரி, உறவினர் ரீட்டா, வங்கி ஊழியர் தேவி பிலோமினா ஆகிய 5 பேர் மீது வல்லம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் எட்வின் ஜெயக்குமார், மதுரை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாட்சர், கணவரின் அந்தரங்க புகைப்படங்கள், ஆபாச வீடியோக்களை மதுரை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். மனுவை விசாரித்து எட்வின் ஜெயக்குமார் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளை பதிவு செய்து உடனடியாக கைது செய்ய மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 7ம் தேதி எட்வின் ஜெயக்குமார் உட்பட 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் தேடுவதை அறிந்த எட்வின் ஜெயக்குமார் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சில
  • சர்ச், மருத்துவமனை கட்டுவதாக கூறி பேஸ்புக் மூலம் பல லட்சம் சுருட்டல்: நைஜீரியாவை சேர்ந்தவர் உட்பட 3 பேர் கைது



  • கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் விபரீதம் மட்டன் குழம்பில் சயனைடு கலந்து கணவனை கொல்ல முயன்ற மனைவி: 5 பேர் அதிரடி கைது



  • இளம்பெண் சாவில் திருப்பம்; கள்ளக்காதலியை கொடூரமாக கொன்று தூக்கில் தொங்கவிட்ட வாலிபர் கைது: உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்



  • துபாய், மலேசியா, இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 18 பேரிடம் ரூ5.5 கோடி தங்கம் பறிமுதல்: அதிகாரிகளை தாக்கி 4 கடத்தல் காரர்களை மீட்டு சென்ற கும்பலுக்கு வலைவீச்சு



  • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 8 ஆண்டு சிறை: கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு



  • ஆவடியில் பரபரப்பு அத்தையிடம் தகாத முறையில் நடக்க முயன்றதால் ஆட்டோ டிரைவர் கொலை: 2 தாய்மாமா கைது; பகீர் தகவல்



  • பெரியபாளையத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து பணம் கொள்ளை



  • திருச்சூர் அருகே ஆற்றில் வீசி 4வயது பெண் குழந்தையை கொன்ற ெகாடூர பெண்ணுக்கு ஆயுள் சிறை



  • மார்த்தாண்டம் நகைக் கடையில் கொள்ளை அதிமுக பிரமுகர் தப்பியோட்டம்: கடைக்கு சீல்; கார் பறிமுதல்



  • படுக்கையறையில் செல்போன்களை பொருத்தி மனைவியின் கள்ளஉறவை பதிவு செய்த கணவர்: கள்ளக்காதல் ஜோடி கொலையில் பரபரப்பு தகவல்கள்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]