இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ரூ.88 கோடி முறைகேடு: போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் விஜிலன்ஸ் ரெய்டு...50க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது

2/8/2025 2:29:10 PM
விஜய்யை விசாரிக்கும் திட்டம் இப்போது இல்லை அன்புச்செழியனுக்கு ஐடி சம்மன்: இன்று நேரில் ஆஜராக அறிவுறுத்தல் ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு: 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா?..பழைய ஒப்பந்தம் ரத்து ஆகுமா

சென்னை: தமிழக காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ரூ.88 கோடி முறைகேடு நடைபெற்றது தொடர்பாக 3 உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.தமிழக காவல் துறையை நவீனமாக்கும் திட்டத்தின் படி 2017-18-ம் ஆண்டில் தமிழக காவல்துறைக்கு ரூ. 47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியின் கீழ் 2017ம் ஆண்டு காவல் துறைக்கு நவீன வாக்கி டாக்கி வாங்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நவீன கருவிகள் வாங்குவதற்கான பணிகளை தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவு மேற்கொண்டுவந்தது. புதிய கருவிகளை வாங்க பல்வேறு நிறுவனங்களுக்கு டெண்டர் கோரிய நிலையில், டெண்டர் நடைமுறையில் ஊழல் நடந்திருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய அப்போதைய உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, அப்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதினார். அதில் “தமிழகக் காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்க விடப்பட்ட டெண்டரில் பல்வேறு விதிமீறல்கள் இருக்கின்றன. வாக்கி - டாக்கிக்கு 28 சதவிகிதமாக இருந்த வரி, ஜிஎஸ்டி சட்டம் அமலான பிறகு 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டாலும், குறிப்பிட்ட ஒரு கம்பெனிக்கு 28 சதவிகிதமாகக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் காவல் துறையை நவீனமயமாக்க ரூ. 47 கோடி நிதிதான் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளபோது, 88 கோடிக்கு எப்படி டெண்டர் விடப்பட்டது. ரூ. 88 கோடி டெண்டரில் ஒரேயொரு நிறுவனம் மட்டும் கலந்துகொண்ட நிலையில் மறு டெண்டர் விடாமல் அந்த ஒரே நிறுவனத்துகு எப்படி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்த முறைகேட்டில் தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய முக்கிய அதிகாரி உள்பட ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கும், தற்போது பதவியில் இருக்கும் உயர் காவல் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘வாக்கி டாக்கி முறைகேடு தொடர்பாக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்தநிலையில், தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய உயர் அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தியது. குறிப்பாக இந்த முறைகேடு நடந்த நேரத்தில் தொழில்நுட்பபிரிவு எஸ்பியாக இருந்த அன்புச் செழியன் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைப் போன்று காவல்துறையில் தொழில்நுட்ப துறையின் ஒப்பந்ததாரர்கள் சிலரிடமும் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக தொழில்நுட்ப பிரிவு உயர் அதிகாரிகளின் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று காலை முதல் ேசாதனை நடத்திவருகின்றனர். அதன்படி கீழ்பாக்கம் பால்பர் சாலையில் உள்ள எஸ்பி அன்புச் செழியன் வீடு, பட்டினப்பாக்கம் மக்கள் தொடர்பு அலுவலர்கள் குடியிருப்பில் உள்ள ஏடிஎஸ்பி ரமேஷ், டிஎஸ்பி உதயசங்கர் வீடுகளில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

மேலும் சைதாப்பேட்டை மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள காவல் துறை உயர் அதிகாரிகள் வீடு மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றுவருகிறது.எஸ்பி அன்புச் செழியன் 2013ம் ஆண்டு முதல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிவந்துள்ளார். வாக்கி, டாக்கி, டிஜிட்டல் மொபைல் ேரடியோ சிஸ்டம், சிசிடிவி உள்ளிட்ட தொழில்சாதனங்கள் வாங்குவது தொடர்பான டெண்டர்களை இறுதி செய்யும் குழுவில் இடம் பெற்றிருந்தார் என்று குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர்த்து காவல் துறைக்கு தொழில்நுட்ப கருவிகள் வாங்கியதில் ரூ.350 கோடி ஊழல் நடந்திருப்பது தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • விஜய்யை விசாரிக்கும் திட்டம் இப்போது இல்லை அன்புச்செழியனுக்கு ஐடி சம்மன்: இன்று நேரில் ஆஜராக அறிவுறுத்தல்



  • ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு: 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா?..பழைய ஒப்பந்தம் ரத்து ஆகுமா



  • பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைபடுத்தக் கோரி பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் ஆர்ப்பாட்டம்: அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு



  • அதிமுக தலைமை அலுவலகத்தில் 14 மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை: 4 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது



  • டிஎன்பிஎஸ்சிமுறைகேடுகளை தொடர்ந்து அடுத்த மோசடி அம்பலம்: 1000 பேருக்கு போலீஸ் வேலை நிராகரிப்பு...போலி சான்றிதழ் தந்து பணியில் சேர முயன்றது கண்டுபிடிப்பு



  • ரூ.77 கோடி சிக்கிய விவகாரம்: அன்புசெழியனின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு...பெரிய ‘தலைகள்’ சிக்குகின்றனர்?



  • புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு: சேலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அரசு உதவி செய்யும்...முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு



  • காவிரி ஆணையத்தை தவறவிட்ட தமிழக அரசு: பெண்ணையாறு பிரச்னையை தீர்க்க புதிய நடுவர் மன்றம் கேட்கிறது...விவசாயிகள் அதிர்ச்சி



  • புதிய காரணங்களைக் கண்டுபிடித்து காஷ்மீரில் தலைவர்களை சிறை வைப்பதை மோடி அரசு கைவிட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • குரூப் 1 தேர்வு முறைகேடுகளை மூடி மறைத்து அடாவடி நபர்களை காப்பாற்ற எடப்பாடி அரசு முயற்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]