இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

யு19 உலகக்கோப்பை யாருக்கு? இந்தியா- வங்கதேசம் நாளை மோதல்

2/8/2025 2:25:43 PM
விஜய்யை விசாரிக்கும் திட்டம் இப்போது இல்லை அன்புச்செழியனுக்கு ஐடி சம்மன்: இன்று நேரில் ஆஜராக அறிவுறுத்தல் ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு: 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா?..பழைய ஒப்பந்தம் ரத்து ஆகுமா

டர்பன்: 2020ம் ஆண்டு யு19 உலக்கோப்பை யாருக்கு சொந்தம் என தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் நாளை பலப்பரீட்சை செய்கின்றன.ஐசிசி சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 17ம் தேதி முதல் தென் ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி நியூசிலாந்து, இலங்கை, ஜப்பான் அணிகளை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. சூப்பர் லீக் கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா 74 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.

பரபரப்பான அரை இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், 10 விக்கெட் வித்தாயசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி தொடர்ந்து 3வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. 2வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து-வங்கதேசம் அணிகள் மோதின. இதில், வங்கதேசம் அணி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. உலகக்கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை போர்ச் செப்ஸ்ட் ரூமில் நடக்கிறது. இதில், இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. 4 முறை உலகக்கோப்பை வென்றுள்ள இந்திய அணி நடப்பு சாம்பியன் என்ற பட்டத்துடன் இறுதிப்போட்டியை எதிர்கொள்கிறது. இந்த முறையும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 2வது முறையாக வென்று சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

இந்நிலையில், யு19 இந்திய கிரிக்கெட் அணிக்கு சீனியர் வீரர்கள் (யு19 உலகக்கோப்பையை வென்ற அணியில் இருந்தவர்கள்) வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.
புஜாரா: இதுவரைக்கும் தொடரில் எவ்வாறு ஆடினீர்களோ, அதையே பின்பற்றுங்கள். இறுதி போட்டி என்பதால் கூடுதல் அழுத்தம் தேவையில்லை. உங்களுடைய இயல்பான ஆட்டத்தை வெளிபடுத்துங்கள்.நிச்சயமாக நீங்கள் உலகக்கோப்பையை வென்று வருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

விஜய் சங்கர்: இது ஒரு பெரிய சந்தர்ப்பம். முயற்சி செய்து மகிழுங்கள். வாழ்த்துக்கள்.
சாகா: நீங்கள் எப்போதும் இருந்த வழியில் ஆதிக்கம் செலுத்துங்கள். எதிர் அணி யார் என்பது முக்கியமல்ல. அவரை துவம்சம் செய்யுங்கள்.
ரகானே: இதுவரைக்கும் எப்படி விளையாடினீர்களோ, அப்படியே விளையாடுங்கள். நாங்கள் எல்லாம் உங்களை ஆதரிக்கிறோம். நாடே உங்களுக்கு பின்னால் இருக்கிறது.

இந்தியா யு19 கிரிக்கெட் அணி இதுவரை 4 முறை உலகக்கோப்பை வென்றுள்ளது. அதன் விவரம்:
2000ம் ஆண்டு (கேப்டன்: முகமது கைப்), 2008ம் ஆண்டு (கேப்டன்: விராத் கோஹ்லி), 2012ம் ஆண்டு (கேப்டன்: உன்முக்த் சந்த்) மற்றும் 2018ல் (கேப்டன்: பிரித்வி ஷா) இளைஞர் உலக கோப்பையை வென்றுள்ளது.

மேலும் சில
  • வங்க கிரிக்கெட் சங்கத்தில் டால்மியா மகன், கங்குலி அண்ணனுக்கு புது பதவி



  • மாலத்தீவு நாட்டில் பானி பூரி பரிமாறும் தோனி



  • ஒரு போட்டோ பதிவிட்டதால் வந்த வம்பு என் லக்கேஜை நானே சுமந்துக்கிறேன்..! கிரிக்கெட் வீரரின் மனைவி ஆவேசம்



  • பெண் வீராங்கனைக்கு பயிற்சி அளிக்க ஆண் பயிற்சியாளர்களுக்கு தடை...அரியானா அமைச்சர் அதிரடி அறிவிப்பு



  • கொரோனா பலியால் பல நாடுகளில் பீதி: என்னாது ஒலிம்பிக் போட்டி ரத்தா?...தலைமை செயல் அதிகாரி விளக்கம்



  • வறுமையில் வாடிய முன்னாள் பூப்பந்து வீராங்கனை: பணம் கொடுப்பதை விட திருமணம் ‘பெஸ்ட்’...வெளிநாடுவாழ் இந்தியரின் செயலுக்கு பாராட்டு



  • நியூஸி. எதிரான ஒன்டே இந்திய அணி பேட்டிங்...ரோஹித்துக்கு பதில் ப்ரிதிவ் ஷா



  • வீடில்லை, கூடார வாழ்க்கை, பட்டினியாக படுத்த இரவுகள்: அன்று பானி பூரி விற்ற சிறுவன்... இன்று பாக். எதிராக செஞ்சுரி...யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தேடும் சர்வதேச ரசிகர்கள்



  • காயத்தால் ரோஹித் சர்மா ஓய்வு எதிரொலி: ரெண்டு தொடருக்கு இடையே 15 நாளாவது ஓய்வு கொடுங்கப்பா..!கடுப்பான புது ஆலோசனைக் குழு உறுப்பினர்



  • கோல்டன் கேர்ள் சாம்பியன்ஷிப் 14 பதக்கங்களை குவித்த இந்தியா: சிறந்த குத்துச்சண்டை வீரர் பிராச்சி தங்கர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]