கல்பாக்கம் அருகே கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது
2/6/2025 3:51:12 PM
திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.கல்பாக்கம் அருகே கூவத்தூர், வடபட்டினம் உள்பட பல்வேறு கிராமப் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக நேற்று கூவத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையில், அங்கு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட கூவத்தூர் பேட்டையை சேர்ந்த கமலா (52), வடபட்டினம் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (34) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.