இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஏழுமலையான் கோயில் கோபுரம் மீது விதிமுறைகளை மீறி பறந்த விமானம்: பக்தர்கள் கடும் அதிர்ச்சி

2/6/2025 3:43:39 PM
விஜய்யை விசாரிக்கும் திட்டம் இப்போது இல்லை அன்புச்செழியனுக்கு ஐடி சம்மன்: இன்று நேரில் ஆஜராக அறிவுறுத்தல் ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு: 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா?..பழைய ஒப்பந்தம் ரத்து ஆகுமா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் கோபுரம் மீது கடந்த 2 நாட்களாக விதிமுறைகளை மீறி விமானம் பறந்தது. இதனால் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சி  ஏற்பட்டது. உலகபுகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள ஏழுமலையானுக்கு  நாள்தோறும் வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த விதிகளின்படி கோயில் கோபுரம் உள்ள பகுதியில் விமானங்கள் பறக்கக் கூடாது என  தேவஸ்தான அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தேவஸ்தானம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளது.

இக்கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, ஏழுமலையான் கோயில் பகுதியில் விமானங்கள் பறப்பதற்கு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்காவிட்டாலும் விமானங்கள்  பறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.  இக்கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாலும் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் நேஷனல் சர்வே ஆப் இந்தியா 5 ஆண்டுக்கு ஒருமுறை எடுக்கக்கூடிய நிலப்பரப்பின் சர்வே பணிக்காக ஏழுமலையான் கோயில்  மீது கடந்த 2 நாட்களாக விமானம் தொடர்ந்து பறந்து வருகிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள்,  சென்னை ஏர் டிராபிக் கன்ட்ரோலருக்கு புகார் அளித்தனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள்  உறுதி அளித்துள்ளனர்.  இந்நிலையில் பாஜ மாநில செயலாளர் பானுபிரகாஷ் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என உள்துறை  அமைச்சகத்திற்கு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் நேற்று விமானங்கள் பறந்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சருக்கு பேசி உள்ளேன்.  மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்’’ என்றார்.

மேலும் சில
  • தோமாலை, சகஸ்கர கலசாபிஷேகம் உள்பட சிறப்பு சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் அதிரடி



  • டெல்லி சட்டப்பேரவை தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு...70 தொகுதிகளில் 13 ஆயிரம் வாக்குச்சாவடி



  • ஆன்லைன் வர்த்தக கொள்ளை அரசுக்கு தெரியுமா? : மக்களவையில் திமுக எம்பி தயாநிதிமாறன் கேள்வி



  • கர்நாடக மாநில அமைச்சரவை 2-ம் கட்டமாக விஸ்தரிப்பு: அணி மாறிய 10 பேருக்கு அமைச்சர் பதவி



  • 70 தொகுதியில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் டெல்லியில் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது...சிஏஏ போராட்ட பகுதி வாக்குச்சாவடிகளுக்கு ‘அலர்ட்’



  • பாஜக நிர்வாகிக்கு மிரட்டல் சுயேட்சை எம்எல்ஏ கைது: கோவாவில் பரபரப்பு



  • மாஜி ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் மீது தாக்குதல்..பீகாரில் கல்வீசி தாக்கியதில் 2 பேர் காயம்



  • கேரளாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாகாது: முதல்வர் திட்டவட்டம்



  • கேரளாவை மிரட்டும் கொரோனா வீடுகளில் இருந்து வெளியேற 2321 பேருக்கு 28 நாள் தடை...சுகாதாரத்துறை நடவடிக்கை



  • தெலங்கானா அமைச்சராகும் கேரள போலீஸ் ஐஜி: ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]