தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: சிறப்பு ரயில் 6ம் தேதி வரை இயக்கம்
2/4/2025 4:35:49 PM
சென்னை: தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு நாளை(5ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்கள் வசதிக்காக இன்று முதல் 6ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி - தஞ்சாவூர் சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து பகல் 12.10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும். தஞ்சாவூரில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு திருச்சி வந்தடையும். தஞ்சாவூர்- மயிலாடுதுறை சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.
மயிலாடுதுறையில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் வந்தடையும் திருவாரூர்- தஞ்சாவூர் சிறப்பு ரயில் திருவாரூரில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு காலை 5.45 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும். தஞ்சாவூரில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.30 மணிக்கு திருவாரூர் வந்தடையும். காரைக்கால்- தஞ்சாவூர் சிறப்பு ரயில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வழியாக மதியம் 1 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும். தஞ்சாவூரில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வழியாக மாலை 5.30 மணிக்கு காரைக்கால் வந்தடையும்.