இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மருத்துவமனையில் 84 பேர் கண்காணிப்பு: கேரளாவை மிரட்டும் கொரோனா...மாநில பேரிடராக அறிவிப்பு

2/4/2025 3:36:43 PM
ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வரை ஒரு மாணவி, 2 மாணவர்களுக்கு கொரேனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து 3 பேரும் தனித்தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் நிலையை 24 மணிநேரமும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.இவர்களது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இது ஒருபுறம் இருக்க மருத்துவமனை மற்றும் வீடுகளில் கண்காணிக்கப்படுவோர் எண்ணிக்கை 2299 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவமனையில் 84 பேரும், மற்றவர்கள் வீடுகளிலும் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 140 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிக்கை வந்துள்ளது. 91 பேரின் பரிசோதனை அறிக்கை வரவேண்டி உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கேரள தலைமை செயலாளர் டோம்ஜோஸ் தலைமையில் பேரிடர் நிவாரண முகமையின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளதால் மாநில பேரிடராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியது: கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே நோயை கட்டுப்படுத்தும் எண்ணத்தில் மாநில பேரிடராக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வந்தவர்கள் உடனடியாக அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இது குறித்து வெளியே சிலர் சொல்லாமல் இருக்கின்றனர். இது குற்றமாக கருதி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

எனவே சீனாவில் இருந்து வந்தவர்கள் அந்தந்த பகுதி சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். திருச்சூர், ஆலப்புழா, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் 82 பேர் நெருங்கி பழகியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவர்களில் 40 பேர் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த சூழ்நிலையில் தான் மாநில பேரிடராக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விடுமுறை ரத்து

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் விடுமுறையில் உள்ள சுகாதாரத்துறையை சேர்ந்த ஊழியர்கள், டாக்டர்கள் அனைவரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். தற்போது 7 மாவட்ட கலெக்டர்கள் பயிற்சிக்காக விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்படும். இவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளார்.

மேலும் சில
  • சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஆளுநர் மீது வழக்கு: உத்தரபிரதேச போலீஸ் நடவடிக்கை



  • திருப்பதி கோயில் உண்டியலில் செலுத்திய கை கடிகாரங்கள் ஆன்லைனில் ஏலம்



  • கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு



  • வரும் 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் டெல்லியில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி? : கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்



  • ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் செல்லும் பைப் லைனில் கேஸ் கசிவு: மின்சாரம் துண்டிப்பு; மக்கள் ஓட்டம்



  • தந்தை என்கவுன்டர், தாய் அடித்துக் கொலை: தவித்த சிறுமியை தத்தெடுத்த போலீஸ் ஐஜி: உத்தரபிரதேச மாநிலத்தில் நெகிழ்ச்சி



  • தமிழ்நாடு, பெங்களூரு, டெல்லியில் ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது எதிரொலி: போலீசாருக்கு தீவிரவாதிகள் மிரட்டல்...தமிழில் எழுதப்பட்ட அச்சுறுத்தல் பதிவு சிக்கியது



  • சிஏஏ ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது 4 நாளில் 3வது முறையாக டெல்லியில் நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு...தேர்தல் பணியில் இருந்து போலீஸ் அதிகாரி அதிரடி நீக்கம்



  • உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வு முன்பாக சபரிமலை வழக்கு நாளை விசாரணை



  • சீனாவில் இருந்து 2வது முறையாக இன்று காலை: 28 தமிழர்கள் உட்பட 323 பேர் டெல்லி வந்தனர்: இதுவரை 81 தமிழர் உட்பட 654 பேர் மீட்பு: சீனாவில் வைரஸ் பலி 304 ஆக அதிகரிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]